பாரதி தயாள்
பாரதி தயாள் | |
|---|---|
| பிறப்பு | திசம்பர் 1961 (அகவை 64) சமஸ்திபூர், பீகார், இந்தியா |
| பணி | ஓவியக் கலை |
| செயற்பாட்டுக் காலம் | 1984–தற்போது வரை |
| அறியப்படுவது | மதுபாணி மிதிலை ஓவியங்கள் |
| வலைத்தளம் | |
| https://bhartidayal.com/ | |
பாரதி தயால்[1] (Bharti Dayal) (பிறப்பு: டிசம்பர் 1961, தர்பங்கா மாவட்டம், சமஸ்திபூர்[2]) மதுபானி ஓவியப் பாணியில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்தியக் கலைஞர் ஆவார்.[3]
வாழ்க்கை வரலாறு.
[தொகு]மதுபானி ஓவியத்திற்கு புகழ்பெற்ற மிதிலைப் பிராந்தியமான வடக்கு பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் பாரதி தயால் பிறந்தார். இளங்கலை அறிவியல் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[4]
1991 முதல் டெல்லியில் வசித்து வருகிறார்.
பணிகள்
[தொகு]சிறு வயதிலிருந்தே, பாரதிக்கு தாயார் மற்றும் பாட்டியால் மதுபானி ஓவியம் கற்றுக் கொடுக்கப்பட்டது.[4] 1984 முதல் தொழில் ரீதியாக கலை வடிவத்தைத் தொடர்ந்தார். மிதிலையில் நடைமுறையில் உள்ள பாரம்பரிய கலையில் புதுமைகளைக் கொண்டுவருவதற்கும், புது தில்லியில் உள்ள தனது கலை அரங்கத்தில் பிராந்தியத்தைச் சேர்ந்த பிற பெண் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும் செய்கிறார்.
இவர் இயற்கை, காய்கறி அடிப்படையிலான வண்ணங்களால் வண்ணம் தீட்டுகிறார். கிருட்டிணன் மற்றும் இராதை ஆகியோரைப் பற்றிய பாடல்கள் "அன்பு, ஏக்கம் மற்றும் அமைதி" ஆகியவற்றின் ஆழங்களை சித்தரிப்பதாக கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bharti Dayal is a Madhubani painting artist (National Awardee) from India". www.bhartidayal.com/.
- ↑ "Artists: Bharti Dayal (b. 1961)". Museum of Sacred Art. Archived from the original on 6 March 2016. Retrieved 2 March 2016.
- ↑ "Folk paintings and traditions of India". www.thehansindia.com (in ஆங்கிலம்). 2016-05-23. Retrieved 2022-04-08.
- ↑ 4.0 4.1 "Artists: Bharti Dayal (b. 1961)". Museum of Sacred Art. Archived from the original on 6 March 2016. Retrieved 2 March 2016.
நூல்பட்டியல்
[தொகு]- Singh, N. K.; Stern, Nicholas (23 August 2013). The New Bihar. HarperCollins Publishers India. ISBN 978-93-5029-642-4.