பாரதி தமிழ்ச் சங்கம் : கல்கத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
             பாரதி தமிழ்ச் சங்கம் : கல்கத்தா 

தோற்றம்

   பாரதி தமிழ்ச் சங்கம் : கல்கத்தா 7.2.1941 இல் டாக்டர் கே.ஏசு .கிருட்டிணன் அவர்களால் நிறுவப்பெற்றது .

நோக்கம்

   அரசியல் கருத்துக்களில் கலக்காமல் தமிழர்களுக்கும் , தமிழன் முன்னேற்றத்திற்கும் தொண்டு செய்வதோடு அயல் மொழிகளின் சிறப்பையும் , தமிழர் அறிந்து கொள்வதற்கு வேண்டிய வழிமுறைகளை செய்வதே இச்சங்கத்தின் நோக்கமாகும். 

நூல்களின் விவரங்கள்

    1.இந்நூலகத்திலுள்ள நூல்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் 
    2.ஆராய்ச்சி நூல்கள் ,தமிழ் இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் , தமிழ் இலக்கியம் பற்றிய ஆங்கில நூல்கள் இடம் பெற்றுள்ளன.


பணிகள்

   1.கல்கத்தாவில் வாழும் தமிழர்களுக்கென்று இலவச வாசக சாலையும் ,நூல்நிலையமும் அமைத்து நடத்துதல் 
   2.தமிழ் இலக்கியங்களின் பற்பல கருத்துக்கள் ,இவற்றை அறிய உதவும் வகையில் வாரந்தோறும் அறிஞர்களின் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்கிறது. 
   3.தமிழ் வகுப்புகளையும் , வங்காள வகுப்புகளையும் நடத்துகிறது. 
   4.பாரதி மலர் வெளியிடுதல் , பாரதி செயந்தியைச் சிறப்பாகக் கொண்டாடுதல் போன்ற பணிகளும் செய்து வருகின்றது.