பாரதி சிவாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரதி சிவாஜி என்பவர் மோகினி ஆட்டம் ஆடக்கூடிய இந்திய நடன கலைஞர் ஆவார்.[1].அவர் நடன கலைஞர் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.அவர் நடனம் மட்டும் அல்லாது கலைக்காக செயல்திறன்,ஆராய்ச்சி மற்றும் நடனத்தை பரப்புதல் போன்றவற்றிலும் பங்களித்துள்ளார்[2].அவர் மோகினியாட்ட நடன மையம் மற்றும் மோகினியாட்ட நடன அகாடமியையும் [3].தோற்றுவிஹ்த்தார்.மோகினியாட்ட கலை[4] மற்றும் மோகினியாட்டம்[5] என்கிற இரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.சங்கீத நாடக அகாடமி விருது[6] மற்றும் சாஹித்ய கலா பரிஷத் சம்மன்[7] என்ற விருதையும் பெற்றுள்ளார்.இந்திய பாரம்பரிய நடன பங்களிப்பிற்காக 2004-ல் இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருதை வழங்கியது.[8]

வாழ்க்கை வரலாறு[தொகு]

பாரதி சிவாஜி தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கோயில் நகரம் கும்பகோணத்தில் 1948-ல் பிறந்தார்.[9] அவர் ஆரம்ப காலங்களில் லலிதா சாஸ்திரியிடம்[10] பரதநாட்டிய பயிற்சியும் கோலுச்சரன் மோஹுபத்ராவிடம் [11] ஒடிசி பயிற்சியும் பெற்றார்.பின்னர் கமலாதேவி சோட்டாபதியாய் சமூக சீர்திருத்தவாதி அவர்களின் அறிவுரை படி கேரளாவின் பாரம்பரிய நடனமான மோகினியாட்டத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.சங்கீத நாடக அகாடமியிலிருந்து ஆராய்ச்சி உதவித்தொகை பெற்றவுடன் கேரளாவுக்கு சென்றார்.கேரள கோயில்கள் கலையின் ஆராய்ச்சியாளரும் சங்கீத நாடக அகாடமியின் துணைத்தலைவருமான கவலம் நாரயண பனிக்கரிடம் ஆராய்ச்சி மேற்கொண்டார்.[12] அதனால் பரதநாட்டியம் மற்றும் ஒடிசியிலிருந்து அவர் கவனம் திசை திரும்பியது.தொடக்கத்தில் ராதா மரர் அவர்களிடமும் பின்னர் கலாமண்டலம் சத்யபாம அவர்களிடமும் மோகினியாட்டம் பயிற்சி பெற்றார்.மோகினியாட்டத்தின் தாய் என்று அழைக்கப்படும் கலாமண்டலம் கல்யாண்க்குட்டி அம்மா அவர்களிடம் பயிற்சி பெற்றார்.[13]

விருதுகள்[தொகு]

 • சங்கீத நாடக அகாடமி விருது(1999-2000)
 • 2004 குடியரசு தின விழாவில் பத்மச்ரி விருது
 • கேரளா, குஞ்சன் நம்பியார் நினைவு அறக்கட்டளையிடமிருந்து லஸ்யா லெட்சுமி பட்டம்
 • சென்னை,கிருஷ்ண கானா சபாவிடமிருந்து நித்ய சூடாமணி பட்டம்[14]
 • 2017 ல் கேரளா அரசாங்கத்தால் வழங்கபட்ட நிஷாகாந்தி புரஸ்காரம் விருது[15]

சிறப்புகள்[தொகு]

சாரா மற்றும் உர்ஸ்பர் அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் இருவரும் மோகினியாட்டத்தின் சிறப்புகள்,சிவாஜியின் கலைத்திறமை மற்றும் அவரது மகள் விஜயலெட்சுமியின் எதிர்காலம் பற்றிய ஆவண படம் எடுத்தனர்.78 நிமிட ஆவண்ப்படமானது அம்மா மகளின் இணைப்பு வேலையைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது.[16] 2011 ஜூலை 9ந்தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட்டில் உள்ள ராலே திரையரங்கத்தில் திரையிடப்பட்டது.[17]

மேற்கோள்[தொகு]

 1. "Heritage Club IIT Roorkee". Heritage Club IIT Roorkee. 2015. Retrieved November 26, 2015.
 2. "Mohiniyattam (Bharati Shivaji and Vijayalakshmi)". Exotic India Art. 2015. Retrieved November 26, 2015.
 3. "Classical Dancers of India". Classical dancers. 2015. Retrieved November 26, 2015
 4. Bharati Shivaji, Avinash Pasricha (1986). Art of Mohiniyattam. Lancer, India. p. 107. ISBN 978-8170620037.
 5. Bharati Shivaji, Vijayalakshmi (2003). Mohiniyattam. Wisdom Tree. ISBN 9788186685365.
 6. "Sangeet Natak Akademi Puraskar". Sangeet Natak Akademi. 2015. Retrieved November 25, 2015
 7. Padmashri Bharati Shivaji". Thiraseela. 2015. Retrieved November 26, 2015
 8. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. Retrieved July 21, 2015.
 9. "Performers of Indian dances and music". Indian Embassy, Russia. 2015. Retrieved November 26, 2015.
 10. "Bound to Kerala by Mohiniyattam". The Hindu. 17 May 2012. Retrieved November 26, 2015
 11. "Time for Samvaad". The Hindu. 16 November 2014. Retrieved November 26, 2015.
 12. "From law to theatre". The Hindu. 31 October 2004. Retrieved November 26, 2015.
 13. "Kalamandalam Kalyanikutty Amma". Smith Rajan. 2015. Retrieved November 26, 2015.
 14. "Profile of Padmashree Bharti Shiwaji". Spicmacay. 2015. Retrieved November 26, 2015
 15. "Nishagandhi Award for Bharati Shivaji". The Times of India. 2017-01-20. Archived from the original on 2017-01-21. Retrieved 2017-01-21.
 16. Beyond Grace". Beyond Grace the Movie. 2015. Retrieved November 26, 2015
 17. "Docu on Mohiniyattam exponents to be screened". Indian Express. 7 July 2011. Retrieved November 26, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதி_சிவாஜி&oldid=2707439" இருந்து மீள்விக்கப்பட்டது