பாரதி சில நினைவுகள் (புத்தகம்)
Appearance
பாரதி சில நினைவுகள் என்பது யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி வரலாற்று நூல் ஆகும். 1939 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூல் எழுதப்பட்ட 15 ஆண்டுகள் கழித்தே வெளியானது. 1912 ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரை புதுச்சேரியில் தான் குழந்தையாய் இருந்த போது பாரதியுடன் பழகிய அனுபவங்களை யதுகிரி இந்நூலுள் விவரிக்கிறார்.
இந் நூல் அதன் உண்மைத் தன்மைக்காகப் பெரிதும் போற்றப்படுகிறது. பாரதி ஒரு குழந்தையின் உள்ளத்தில் உண்டாக்கிய தாக்கத்தை இந்நூல் மூலம் நாம் அறிய முடிகிறது.[1]