பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம் (Bharatiya Muslim Mahila Andolan or BMMA) ('Indian Muslim Women's Movement') இந்தியாவில் முஸ்லீம் மகளிர் நலன் மற்றும் உரிமைகள் காக்கும் சமயசார்பற்ற தன்னாட்சி நிறுவனம் ஆகும். இவ்வமைப்பின் தலைவராக சகிய சோமன் (Zakia Soman) எனும் முஸ்லீம் பெண் உள்ளார்.[1] இவ்வமைப்பு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 2007-இல் நிறுவப்பட்டது.[2]இவ்வமைப்பு 15 இந்திய மாநிலங்களில், 30,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இவ்வமைப்பு முஸ்லீம் பெண்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்து வகுப்பு எடுக்கிறது.[3][4][5]

முஸ்லிம் பெண்கள் நலன் மற்றும் உரிமைகளுக்காக இவ்வியக்கம், முத்தலாக், முஸ்லிம் திருமணம் மற்றும் திருமண விலக்கு குறித்து 23 சூன் 2014 அன்று முஸ்லிம் திருமணம் மற்றும் திருமண விலக்கு சட்ட வரைவை இந்திய அரசிற்கு சட்டமாக்க பரிந்துரைத்தது.[6]

இவ்வியக்கத்தின் முயற்சியால் சூலை 2019-இல் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா, 2019 இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]