பாரடோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரடோல் (Baratol) என்பது ஒரு வெடிபொருளாகும். டிஎன்டி எனப்படும் டிரை நைட்ரோ டொலுயீன், பேரியம் நைட்ரேட்டு கலவையுடன் 1% அளவு [1] மட்டுபடுத்தியாகச் செயல்படும் பாரபின் மெழுகைச் சேர்த்து பாரடோல் உருவாக்கப்படுகிறது. டி,என்,டி 25% முதல் 33% அளவு வரைக்கும் கலவையில் கலக்கப்படுகிறது. ஏனெனில், பேரியம் நைட்ரேட்டு அதிக அடர்த்தி கொண்டது என்பதால் பாரடோல் அடர்த்தி குறைந்தபட்சமாக 2.5 மி.கி/மீ 3 ஆகவாவது இருக்கவேண்டும்.

பாரடோலின் வெடிப்புத் திசைவேகம் வினாடிக்கு 4900 மீட்டர்கள் மட்டுமேயாகும் [2]. தொடக்கக்கால சில அணு குண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் லென்சுகளில் மெதுவாக வெடிக்கும் வெடிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. கூட்டமைவு பி பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்படும் வெடிபொருள்கள் பெரும்பாலும் விரைவு வெடிபொருள் வகை வெடிபொருளாகும். 1945 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட டிரினிட்டியில் அணுகுண்டு வெடிப்பு, 1949 சோவியத் யோ 1 குண்டு வெடிப்பு மற்றும் 1972 இல் இந்தியா அணுகுண்டு வெடிப்பு அனைத்திலுமே பாரடோலும், ’கூட்டமைவு பி‘ யும் பயன்படுத்தப்பட்டன [1].

மில்சு குண்டு எனப்படும் பிரித்தானிய கைவெடிகுண்டுகளிலும் பாரடோல் பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரடோல்&oldid=2390917" இலிருந்து மீள்விக்கப்பட்டது