பாரக்கல் அப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரக்கல் அப்துல்லா
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016–2021
முன்னவர் கே. கே. லத்திகா
பின்வந்தவர் கே. பி. குன்ஹம்மது குட்டி
தொகுதி குற்றுயாடி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

பாரக்கல் அப்துல்லா (Parakkal Abdulla) ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் குற்றியாடி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1958 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் மோய்து ஹாஜி மற்றும் குன்ஹாமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்டக் குழுவின் பொருளாளர் ஆவார்.[1] இவரது மனைவி ஜமீலா ஆவார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர்.[1] இவர் வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் 2016 அன்றைய நிலையில் தோகா, கத்தார் ஆகிய நகரங்களில் 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வந்தார்.[2]2021 கேரள சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பாக குற்றுயாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஆவார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Niyamasabha" (PDF). 12 December 2016. 12 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Parakkal Abdulla, Doha Businessman, becomes Kerala lawmaker". thepeninsulaqatar.com. 21 May 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. Staff Reporter (2021-03-12). "IUML releases list of candidates" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/iuml-releases-list-of-candidates/article34053385.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரக்கல்_அப்துல்லா&oldid=3639195" இருந்து மீள்விக்கப்பட்டது