பாரக்கந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரக்குந்து என்பது கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு எனுமிடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஊராகும். திராவிட சிற்பக்கலை பாணியில் ,தென்னிந்திய இந்து கோவில்களை ஒத்திருக்கும் வகையில், ஓர் அழகான கத்தோலிக்க கிருத்துவ ஆலயம் கட்டப்பட்டுள்ளது.வழிபாட்டுக்குரிய இடத்திற்கு மேல் ஒரு ஸ்தூபி-தூண்- காணப்படுகிறது. உட்புறம் இந்து கோவில்களில் செதுக்கிப்பட்டு வைக்கப்பட்டுள்ள கல்தூண்களைப் போன்று ,கருங்கற்களாலான தூண்கள் உள்ளன.ஆலயத்தில் சலவைக் கற்களாலான சன்னல்களை கொண்டுள்ளன. சன்னலிலுள்ள பின்னற் பூ வேலைப்பாடுகளை கொண்ட சலவைக்கற்கள் அனைவராலும் வியப்புடன் பார்க்கப் படுகின்றன.

நெசவுத் தொழில் பயிற்சிப் பள்ளி ஒன்று உள்ளது.பனைத்தொழில் ,அதனைச் சார்ந்த தொழில்களும் மக்களின் முக்கியத் தொழிலாகும்.கருப்புக்கட்டி உற்பத்தியும் சிறப்பாக நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாவட்ட விவரச்சுவடி. -அரசு வெளியீடு. பக்கம் 1370

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரக்கந்து&oldid=1477332" இலிருந்து மீள்விக்கப்பட்டது