பாய் பரமானந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாய் பரமானந்த்
Bhai Parmanand 1979 stamp of India.jpg
1979இல் இந்திய அரச்சல் வெளிய்டப்பட்ட அஞ்சல் தலையில் பாய் பரமானந்த்
பிறப்பு1876 நவம்பர் 4
ஜீலம், பஞ்சாப் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு1947 திசம்பர் 8
குடியுரிமைபிரித்தானியப் இந்தியா (1947 வரை )
(1947 முதல்) இந்தியன்
பணிவேதங்களை பரப்புனர்
அரசியல்வாதி
அரசியல் கட்சிஇந்து மகாசபை
கதர் கட்சி
ஆரிய சமாஜம்

பாய் பரமானந்த் (Bhai Parmanand) (4 நவம்பர் 1876 - 8 திசம்பர் 1947) இவர் ஓர் இந்து தேசியவாதியும், [1], இந்து மகாசபாவின் முக்கிய தலைவரும், ஆர்யா சமாஜத்தின் முன்னணி உறுப்பினருமாவார். [2] மேலும் இவர், கதர் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார். [3] 1908-09 ஆம் ஆண்டில், இவர் மத அடிப்படையில் இந்தியாவைப் பிரிப்பதை ஆதரித்தார். [4] [5] [6] இந்தியாவில் இந்து மதத்தையும் இஸ்லாத்தையும் பின்பற்றுபவர்கள் இரண்டு வெவ்வேறு நாடுகளாக இருக்க வேண்டும் என அறிவித்தார். [7] இவர் உருது மொழியில் பிரபலமான இலக்கியங்களை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அதில் இந்துக்கள் இந்தியாவின் உண்மையான மகன்கள் என்றும் முஸ்லிம்கள் வெளியாட்கள் என்றும் வலியுறுத்தினார்.

1915 ஆம் ஆண்டில், லாகூர் சதி வழக்கு தொடர்பாக இவர் பிரிட்டிசு அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இவர் 1920 வரை அந்தமான் தீவுகளிலுள்ள சிற்றறைச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் இவர் விடுவிக்கப்பட்டார். [8] இவர் திசம்பர் 8, 1947 இல் மாரடைப்பால் இறந்தார். [3]

இவர், இந்துக்களிடையே சாதி தடைகளை உடைப்பதற்காக 1922 இல் "ஜாட் பாட் டோரக் மண்டல்" என்ற சமூக அமைப்பை நிறுவினார்.லாகூரிலிருந்து இந்தி, உருது ஆகிய மொழிகளில் 'ஆகாஷ்வானி' என்ற வார இதழை வெளியிட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், பஞ்சாபின் ஒரு முக்கிய குடும்பமான மொஹியால் சரஸ்வத் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை தாரா சந்த் மொஹியால் ஜீலம் மாவட்டத்தின் கரியாலாவிலிருந்து வந்து ஆர்யா சமாஜ இயக்கத்துடன் தீவிர மதப் பிரசாரகராக இருந்தார். [3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

அக்டோபர் 1905 இல், இவர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று மகாத்மா காந்தியுடன் வேதங்களை பரப்புவதில் ஈடுபட்டார். [3] கரிபியனிலுள்ள ஆர்யா சமாஜ இயக்கத்தின் மையமாக இருந்த இவர் 1910இல் கயானாவுக்குச் சென்றார். [9]

சான் பிரான்சிஸ்கோவில் ஹர்தயாலுடன் மீண்டும் இணைவதற்கு முன்பு இவர் தென் அமெரிக்காவின் பல பிரிட்டிசு காலனிகளில் சுற்றுப்பயணம் செய்தார். இவர் கதர் கட்சியின் நிறுவனர் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். [8] இவர் 1914 இல் போர்ட்லன்டிற்கு ஒரு பேச்சு சுற்றுப்பயணத்தில் ஹர்தயாலுடன் சென்றார். மேலும் கதர் கட்சிக்காக தாரிக்-ஐ-ஹிந்த் என்ற புத்தகத்தையும் எழுதினார். கதர் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இவர் இந்தியாவுக்குத் திரும்பினார். இவருடன் 5,000 கதரியக்கவாதிகளும் வந்ததாகக் கூறப்பட்டது. கதர் கிளர்ச்சியின் தலைவர்களில் ஒருவராக, பெசாவரில் கிளர்ச்சியை ஊக்குவிக்க இவர் அனுப்பப்பட்டார். இருப்பினும், முதல் லாகூர் சதி வழக்கு தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு 1915 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இந்த தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது, மேலும் இவர் அந்தமான் தீவுகளில் சிறையில் அடைக்கப்பட்டு 1920 வரை கடின உழைப்புக்கு உட்படுத்தப்பட்டார். அரசியல் கைதிகளை இப்படி கடுமையாக நடத்துவதை எதிர்த்து, இவர் இரண்டு மாதங்கள் உண்ணாவிரதம் இருந்தார். ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் பேரரசர் ஜார்ஜ் , இவருக்கு பொது மன்னிப்பு வழங்கியதன் விளைவாக 1920 இல் இவர் விடுவிக்கப்பட்டார். [10]

இந்தியப் பிரிவினை[தொகு]

1908-09 ஆம் ஆண்டில், இவர் மத அடிப்படையில் இந்தியாவைப் பிரிப்பதை ஆதரித்தார். [4] [5] இந்தியாவில் இந்து மதத்தையும் இஸ்லாத்தையும் பின்பற்றுபவர்கள் இரண்டு வெவ்வேறு நாடுகளில் வசிக்க வேண்டும் என இவர் அறிவித்தார். [1] [7] இரண்டு குறிப்பிட்ட பகுதிகளில் இந்துக்களையும், முஸ்லீம் மக்களையும் மொத்தமாக பரிமாறிக்கொள்ள இவர் அழைப்பு விடுத்தார். இதைப் பற்றி தனது சுயசரிதையில், இத்திட்டத்தைப்பற்றி விரிவாக எழுதியிருந்தார்.

இது முஸ்லிம் லீக்கின் பாக்கித்தான் தீர்மானத்திற்கு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இருந்தது. [3]

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில், இந்து சிறுபான்மையினரை மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மையினரிடமிருந்து காப்பாற்றுவதற்காக இவர் பஞ்சாப் மாகாணத்தின் ஒரு பகுதியையும் முன்மொழிந்தார். [11]

இவர், ராஜ்நாராயண் பாசு, நபகோபால் மித்ரா, விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோருடன் மதம் என்பது மக்களைப் பற்றிய மிக அடிப்படையான விஷயம் என்று நம்பினர். தேசிய அடையாளம் என்பது மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியாவில் ஒன்றாக வாழ முடியாது என்றும் நம்பினார். [12]

இறப்பு[தொகு]

இவர் 1947 திசம்பர் 8 அன்று மாரடைப்பால் இறந்தார். இவருக்கு பாய் மகாவீர் என்ற ஒரு மகன் இருந்தார். இவரது மகன் பாரதீய ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றின் முக்கிய உறுப்பினராக இருந்தார். [3]

மரபு[தொகு]

புது தில்லியில் ஒரு வணிக ஆய்வு நிறுவனத்திற்கும், [13] கிழக்கு டெல்லியில் ஒரு பொதுப் பள்ளிக்கும்,டெல்லியில் ஒரு மருத்துவமனைக்கும் இவரது பெயரிடப்பட்டது. [ மேற்கோள் தேவை ]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • The Story of My Life by Bhai Parmanand, translated by N. Sundra Iyer and Lal Chand, The Central Hindu Yuvak Sabha, Lahore, 1934
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்_பரமானந்த்&oldid=3039350" இருந்து மீள்விக்கப்பட்டது