உள்ளடக்கத்துக்குச் செல்

பாய்வுப் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிக தாக்குகோணத்தில் காற்றுப்பாய்வு இறக்கையிலிருந்து பிரிகிறது

பாய்மத்தில் பயணிக்கும் அனைத்து திடப் பொருட்களும் (அல்லது நிலையாக இருக்கும் திடப்பொருள் பாய்வில் வைக்கப்படும்போதும்) தன்னைச் சுற்றி எல்லைப்படலத்தை உண்டுபண்ணுகின்றன, அதில் திடப்பொருளை ஒட்டியுள்ள படலங்களில் பிசுக்குமை விசைகள் செயல்புரியும். இந்த எல்லைப்படலங்கள் வரிச்சீராகவோ அல்லது கொந்தளிப்பாகவோ இருக்கும். திடப்பொருளின் அண்மைப் பாய்வுப் பகுதியை ஆராய்ந்து ரெனால்ட்ஸ் எண்ணைக் கணக்கிடுவதன் மூலம், அப்பாய்வின் தன்மையைக் கணிக்கலாம்.

திடப்பொருளைப் பொறுத்து எல்லைப் படலத்தின் வேகம் சுழியம் ஆகும்வண்ணம் எல்லைப் படலமானது எதிர் அழுத்த மாறுவீதத்தில் பயணிக்கும்போது பாய்வுப் பிரிவு ஏற்படுகிறது. பாய்ம ஓட்டமானது திடப்பொருளின் பரப்பிலிருந்து பிரிந்து சுழிகள் அல்லது சுழிப்புகளாக வடிவெடுக்கிறது. காற்றியக்கவியலில் பாய்வுப் பிரிவானது அதிகரிக்கும் இழுவையோடு தொடர்புடையது, முக்கியமாக திடப்பொருளின் முன் மற்றும் பின்னுள்ள அழுத்த வேறுபாட்டின் காரணமாக உருவாகும் அழுத்த இழுவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக காற்றியக்க மற்றும் நீரியக்க வடிவமைப்புகளில் பாய்வுப் பிரிவு ஏற்படாவண்ணம் வடிவமைக்க மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்வுப்_பிரிவு&oldid=1369554" இலிருந்து மீள்விக்கப்பட்டது