பாய்ச்சலூர்ப் பதிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாய்ச்சலூர்ப் பதிகம் தமிழ் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த உத்தரநல்லூர் நங்கை என்ற பெண்பாற் புலவரால் எழுதப்பட்டது. சாதீய அமைப்புக்கும் நாற்வர்ணக் கொள்கைக்கும் எதிரான கருத்துகளை இந்நூல் கொண்டுள்ளது. பாய்ச்சலூர் எனும் ஊரில் நிலவிய சாதிய அமைப்பை எதிர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மொத்தம் 11 பாக்கள் உள்ளன.

சில பாடல்கள்

சந்தனம் அகிலும் வேம்பும்
தனித்தனி வாசம் வீசும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால்
அதன் மணம் வேறதாமோ?
செந்தலைப் புலையன் வீழ்ந்தால்
தீமணம் வேறதாமோ?
பந்தமும் தீயும் வேறோ
பாய்ச்சலூர் கிராமத்தாரே

ஊருடன் பார்ப்பார் கூடி
உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து
நெருப்பினில் நெய்யைத் தூவி
கார்வயல் தவளைபோல
கலங்கிய உங்கள் வேதம்
பாரைவிட்டு அகன்றதேனோ?
பாய்ச்சலூர் கிராமத்தாரே

மேற்கோள்கள்[தொகு]