பாயல் கபாடியா
பாயல் கபாடியா | |
---|---|
2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் பாயல் கபாடியா | |
பிறப்பு | 1986 (அகவை 37–38) மும்பை, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பூனே திரைப்படக் கல்லூரி |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போது |
பாயல் கபாடியா (Payal Kapadia,பிறப்பு 1986) என்பவர் ஒரு இந்திய திரைப்படப் படைப்பாளியாவார். இவர் 2021 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப் படத்துக்கான கோல்டன் ஐ விருதை எ நைட் ஆஃப் நோனிங் நத்திங் படத்திற்காக பெற்றார்.[1][2][3][4] 2017 ஆம் ஆண்டில், இவரது திரைப்படமான ஆஃப்டர்நூன் கிளவுட்ஸ் 70வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படமாகும்.[5] 2024 ஆம் ஆண்டில், 2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படத்திற்காக இவர் கிராண்ட் பிரி விருதைப் பெற்றார்.[6]
வாழ்க்கை
[தொகு]ஓவியரும், காணொளி கலைஞருமான நளினி மலானிக்கு 1986 ஆம் ஆண்டு மும்பையில் கபாடியா பிறந்தார்.[7] கபாடியா ஆந்திராவில் உள்ள ஒரு உறைவிடப் பள்ளியான இரிஷி பள்ளத்தாக்கு பள்ளியில் பயின்றார். பள்ளியின் திரைப்படச் சங்கத்தின் உறுப்பினராக இருந்ததால், ரித்விக் கட்டக் மற்றும் ஆண்ட்ரி தர்கோவ்ஸ்கி போன்ற அவாண்ட்-கார்ட் திரைப்படப் படைப்பாளிகள் குறித்து அறிந்தார். மும்பை புனித சேவியர் கல்லூரியில் பயின்றார். சோபியா மகளிர் கல்லூரியில் ஓராண்டு முதுகலைப் பட்டம் பெற்றார்.[8] பின்னர் இவர் புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் பயின்றார்.[9] அங்கு இவர் 2012 இல் தனது இரண்டாவது முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடையில் ஐந்து வருடங்கள் இவர் மும்பையில் விளம்பரம் மற்றும் வீடியோ கலை உதவியாளராக பணிபுரிந்தார்.[8] திரைப்படக் கல்லூரியை காவிமயமாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக 2015 ஆம் ஆண்டில், புனே திரைப்படக் கல்லூரியின் தலைவராக கஜேந்திர சவுகானை நியமித்ததற்கு எதிரான போராட்டங்களுக்குத் இவர் தலைமை தாங்கினார். மேலும் நிர்வாகம் இவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.[10] கல்வி நிறுவனம் இவருக்கான மானியங்களை தடைசெய்தது, இவருக்கான உதவித்தொகையும் மறுக்கப்பட்டது.[11][12]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பணிகள் | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|
இயக்குநர் | எழுத்தாளர் | மற்றவை | |||
2014 | வாட்டமிலான், பிஷ் அண்ட் ஆஃப் கோஸ்ட்[13] | ஆம் | இல்லை | இல்லை | குறும்படம் |
2015 | ஆஃடர்நூன் கிளவுட்ஸ் | ஆம் | ஆம் | இல்லை | |
2017 | த லாஸ்ட் மேங்கோ பிஃபோர் த மான்சூன் | ஆம் | ஆம் | படத்தொகுப்பாளர் | |
2018 | அண்டு வாட்டீஸ் த சம்மர் சேயிங் † | ஆம் | ஆம் | இல்லை | |
2021 | எ நைட் ஆப் நோயிங் நத்திங் † | ஆம் | ஆம் | இல்லை | |
2024 | ஆல் வி இமேஜின் ஆஸ் லைட் | ஆம் | ஆம் | இல்லை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Payal Kapadia wins best documentary award in Cannes". India Today (in ஆங்கிலம்). 18 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
- ↑ "Mumbai-based film-maker Payal Kapadia wins Best Documentary Award at Cannes". 19 July 2021. https://economictimes.indiatimes.com/magazines/panache/mumbai-based-film-maker-payal-kapadia-wins-best-documentary-award-at-cannes/articleshow/84549199.cms.
- ↑ "Cannes 2021: India's Payal Kapadia wins best documentary award". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-07-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
- ↑ Entertainment, Quint (2021-07-18). "Cannes 2021: Payal Kapadia's A Night of Knowing Nothing Wins Best Documentary". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
- ↑ "Meet FTII student Payal Kapadia, whose film Afternoon Clouds, was selected for Cannes 2017". Firstpost. 2017-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
- ↑ "Indian filmmaker Payal Kapadia makes history with Cannes Grand Prix win for 'All We Imagine as Light'". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 May 2024.
- ↑ "AN INTERVIEW WITH PAYAL KAPADIA ABOUT „AND WHAT IS THE SUMMER SAYING"". Berlinale. 12 February 2018. பார்க்கப்பட்ட நாள் 26 May 2024.
- ↑ 8.0 8.1 Dore, Bhavya (7 June 2017). "Payal Kapadia: Over the Clouds". Open: The Magazine.
- ↑ "Who Is Payal Kapadia? The Director Wins Best Documentary Award In Cannes" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
- ↑ "কানে ভারতের মুখ উজ্জ্বল করলেন যে পায়েল, তাঁরই অনুদান বন্ধ করে দিয়েছিলেন এফটিআই কর্তৃপক্ষ!". பார்க்கப்பட்ட நாள் 28 May 2024.
- ↑ "Tracing Payal Kapadia's journey, from protesting against Gajendra Chauhan at FTII to winning Grand Prix at Cannes". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-05-26. பார்க்கப்பட்ட நாள் 2024-05-28.
- ↑ "Payal Kapadia, 'All We Imagine…' director, once faced disciplinary action at FTII". India Today (in ஆங்கிலம்). 2024-05-26. பார்க்கப்பட்ட நாள் 2024-05-28.
- ↑ "Watermelon, Fish and Half Ghost (Student Film) – Urban Lens" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.