உள்ளடக்கத்துக்குச் செல்

பாமிர் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pamiris
பாமிர் மக்களின் கொடி
மொத்த மக்கள்தொகை
அண். 300,000–350,000[1] (2006)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தஜிகிஸ்தான்
(கோருனோ-பதகுசான் தன்னாட்சி மாகாணம்)
ஏறத்தாழ. 200,000 (2013)
சித்ரால் மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம் பாக்கித்தான்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பால்டிஸ்தான்
ஏறத்தாழ். 74,605 (2016)[2][3]
ஆப்கானித்தான்
(படாக்சான் மாகாணம்)
65,000[4]
சீனா
(சிஞ்சியாங்)
50,265[5]
ருசியா
(மாஸ்கோ)
32,000 (2018)[6]
மொழி(கள்)
பாமிர் மொழிகள்
இரண்டாம் மொழிகளாக பாரசீக மொழி, தாஜிக் மொழி, தாரி மொழி, உருசிய மொழி மற்றும் உய்குர் மொழி
சமயங்கள்
பெரும்பான்மையாக சியா இசுலாமின் உட்பிரிவுகளான நிசாரி இஸ்மாயிலி மற்றும் சிறுபான்மையாக சன்னி இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஈரானிய மக்கள்
சகர் போர் வீரனின் சிற்பம், கல்சயன், வடக்கு பாக்திரியா, கிமு முதலாம் நூற்றாண்டு

பாமிர் மக்கள் (Pamiris) என்பவர்கள் கிழக்கு ஈரானிய இனக்குழுவினர் ஆவார். இம்மக்கள் நடு ஆசியா உள்ள தஜிகிஸ்தான் நாட்டின் கிழக்கில், சீனாவை ஒட்டியுள்ள கோருனோ-பதகுசான் தன்னாட்சி மாகாணத்தில் உள்ள பாமிர் மலைப்பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

மேலும் பாமிர் மக்கள்.ஆப்கானித்தான் நாட்டின் படாக்சான் மாகாணம், சீனாவின் சிஞ்சியாங் பிரதேசம், ருசியாவின் மாஸ்கோ நகரம் மற்றும் பாக்கித்தான் நாட்டின் சித்ரால் மாவட்டம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பால்டிஸ்தான் மலைப்பகுதிகளில்[7] கனிசமாக வாழ்கின்றனர். பாமிர் மக்கள் பெரும்பான்மையாக சியா இசுலாமின் உட்பிரிவான நிசாரி இஸ்மாயிலி மற்றும் சிறுபான்மையாக சன்னி இசுலாமைப் பின்பற்றுகின்றனர். பாமிர் மக்கள் பெரும்பான்மையாக பாமிர் மொழிகள் பேசுகின்றனர். இரண்டாம் மொழிகளாக பாரசீக மொழி, தாஜிக் மொழி, தாரி மொழி, உருசிய மொழி மற்றும் :உய்குர் மொழிகள் பேசுகின்றனர். இவர்களது முக்கியத் தொழில் ஆடு, மாடுகளை மேய்ப்பதாகும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Лашкарбеков 2006, ப. 111 – 30.
  2. Includes Wakhis, Yidghas, Sarikolis and Shughnis. This population figure only includes those who speak the Pamiri languages, members of the ethnic group who no longer speak the languages may not be included.
  3. "Yadgha". Ethnologue. Retrieved 28 March 2025.
  4. "What Languages do People Speak in Afghanistan?". World population review. Retrieved 17 August 2024.
  5. "新疆维吾尔自治区统计局". 11 October 2017. Archived from the original on 11 October 2017. Retrieved 29 December 2023.
  6. Додыхудоева 2018, ப. 108.
  7. Javaid, Muhammad; Naeem, Waqas (10 February 2013). "Preserving local cultures, promotion of harmony needed: Speakers". The Express Tribune. https://tribune.com.pk/story/505132/preserving-local-cultures-promotion-of-harmony-needed-speakers. 

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமிர்_மக்கள்&oldid=4369645" இலிருந்து மீள்விக்கப்பட்டது