பாப் பீமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராபர்ட் பீமன் (Robert Beamon பிறப்பு ஆகஸ்ட் 29, 1946) ஒரு அமெரிக்க முன்னாள் தடகள வீரர் ஆவார். 1968 கோடைகால ஒலிம்பிக்கில் நீளம் தாண்டுதலில் உலக சாதனை படைத்தவர் ஆவார் . அதற்கு முன்பாக இருந்த 55 செ. மீ என்ற சாதனையினை முறியடித்தார்.1991 ஆம் ஆண்டில் மைக் பவல் அதை முறியடிக்கும் வரைஅதாவது கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக இவரது சாதனை முறியடிக்கப்படாமல் இருந்தது. நேஷனல் ட்ராக் அண்ட் ஃபீல்ட் ஹால் ஆஃப் ஃபேமில் இவர் இடம் பெற்றுள்ளார்

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ராபர்ட் பீமன் நியூயார்க்கின் குயின்ஸ், தெற்கு ஜமைக்காவில் பிறந்தார். இவர் நியூயார்க் வீட்டுவசதி ஆணையத்திற்குச் சொந்தமான வீடுகளில் வளர்ந்தார். [1]

அவர் ஜமைக்கா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அப்போது பிரபல தடகள பயிற்சியாளரான லாரி எல்லிஸ் என்பவரால் கண்டறியப்பட்டார். பீமன் தனது கல்லூரி வாழ்க்கையை வட கரோலினா வேளாண் மற்றும் தொழில்நுட்ப மாநில பல்கலைக்கழகத்தில் தொடங்கினார.இவர் தனது பாட்டியுடன் தங்கியிருந்தார்.[2] இவரது பாட்டி இறந்தபிறகு, அவர் எல் பாஸோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு இவர் தடகளத்திற்கான உதவித்தொகையைப் பெற்றார். [3]

1965 ஆம் ஆண்டில் பீமன் ஒரு தேசிய உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது டிரிபிள் ஜம்ப்பில் சாதனை படைத்தார். மேலும் நீளம் தாண்டுதலில் நாட்டில் இரண்டாவது இடத்தினைப் பிடித்தார். 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்கன் விளையாட்டுப் போட்டிகளில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[4]

எல் பாஸோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தினால் பிரிஹாம் இளாஇயோர் பல்கலைக்கழகத்திற்கு எதிரான புறக்கணிக்கப்பட்ட தடகளப் போட்டியில் பங்குபெற்றதால் பீமன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.[5] ரால்ஃப் போஸ்டன் இவரது அறிவிக்கப்படாத தலைமைப் பயிற்சியாளரக இருந்தார்.

1968 கோடைகால ஒலிம்பிக்[தொகு]

1968 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நகரில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் இவர் கலந்துகொண்டார். அந்த ஆண்டில் அவர் போட்டியிட்ட 23 போட்டிகளில் 22 இல் வென்றார், இதில் 8.33மீ என்பது இவரின் சாதனையாக இருந்தது. அந்த ஆண்டு அவர் AAU மற்றும் NCAA உள்ளரங்கு நீளம் தாண்டுதல் மற்றும் டிரிபிள் ஜம்ப் பட்டங்களையும், AAU வெளியரங்கு நீளம் தாண்டுதல் பட்டத்தையும் வென்றார். [4] மேலும் இவர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றினார். அங்கு அவர் முந்தைய இரண்டு ஆண்டுகளில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் ரால்ப் பாஸ்டன் (1960) மற்றும் கிரேட் பிரிட்டனின் லின் டேவிஸ் (1964) ஆகியோரையும், இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்ற சோவியத் யூனியனின் இகோர் டெர்-ஓவனேசியனையும் எதிர்கொண்டார் . [6]

மரியாதைகள்[தொகு]

பீமன் நேஷனல் ட்ராக் அண்ட் ஃபீல்ட் ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெற்றுள்ளார். மேலும் 1983 ஆம் ஆண்டில் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒலிம்பிக் ஹால் ஆஃப் ஃபேமின் அறிமுக ஆண்டில் இடம் பெற்றவர்களில் ஒருவர் ஆனார்.[7] [8] டெக்சாஸின் எல் பாஸோவில் பாப் பீமன் என்று ஒரு தெரு உள்ளது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_பீமன்&oldid=2907342" இருந்து மீள்விக்கப்பட்டது