பாப்பார் ஆறு
| பாப்பார் ஆறு Papar River | |
|---|---|
பாப்பார் ஆற்றின் காட்சி | |
![]() | |
| அமைவு | |
| நாடு | |
| மாநிலம் | |
| பிரிவு | மேற்கு கரை பிரிவு |
| அமைவிடம் | வடமேற்கு போர்னியோ |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | பாப்பார் மாவட்டம், பெனாம்பாங் மாவட்டம், துவாரான் மாவட்டம் |
| முகத்துவாரம் | |
• அமைவு | பாப்பார் மாவட்டம், தென்சீனக் கடல் |
• ஆள்கூறுகள் | 5°45′08.6″N 115°54′29.9″E / 5.752389°N 115.908306°E |
• உயர ஏற்றம் | கடல் மட்டம் |
| நீளம் | 60 கி.மீ |
வடிநில அளவு | 805 சதுர கி.மீ |
| வெளியேற்றம் | |
| • அமைவு | பாப்பார் மாவட்டம், தென்சீனக் கடல் |
| • சராசரி | 1.53 km3/a (48 m3/s)[1] |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| பாயும் வழி | தென்சீனக் கடல் |
| நதி அமைப்பு | பாப்பார் ஆறு[2] |
பாப்பார் ஆறு (மலாய்; Sungai Papar; ஆங்கிலம்: Kinabatangan Papar) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவில் உள்ள ஆறு ஆகும். வடமேற்கு சபாவின் மலைப்பகுதிகளில் உள்ள அதன் பிறப்பிடத்தில் இருந்து, பாப்பார் நகரத்தின் வடமேற்கே தென் சீனக் கடலில் கலக்கும் வரை, இந்த ஆறு 60 கிமீ (37 மைல்) நீளத்தைக் கொண்டுள்ளது.
இந்த ஆறு, குரோக்கர் மலைத்தொடர் அமைப்பின்[3] ஒரு பகுதியாக இருக்கும் பாப்பார், பெனாம்பாங் மற்றும் துவாரான் ஆகிய உட்பகுதி மாவட்டங்களின் மலைகளில் உற்பத்தியாகிறது. கினபத்தாங்கான் ஆறு மற்றும் பாடாஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளையும் தவிர, நீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் இந்த ஆறு மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றாகும். மேலும் நன்னீர் மீன்களின் வாழ்விடமாகத் திகழும் இந்த ஆறு; கிராமவாசிகளின் வேளாண் நடவடிக்கைகளுக்கும், ஆற்றங்கரையோர வணிகப் பண்ணைகளுக்கும்; மற்றும் பாப்பார் நகரத்திற்கு நீர் வழங்குவதிலும் முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலையாக அறியப்படுகிறது.
புவியியல்
[தொகு]பாப்பார் ஆறு ஏறக்குறைய 805 சதுர கிலோமீட்டர் (311 சதுர மைல்) பரப்பளவு கொண்ட ஒரு பெரிய வடிநிலப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த ஆற்றுப் படுகையின் வளமான வண்டல் மண், பாப்பார் மாவட்டத்தின் நெல் வேளாண்மை மற்றும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாகச் செல்லும் இந்த ஆற்றின் கரையோரங்களில், மழைக்காலங்களில் நீரோட்டம் மிக அதிகமாக இருக்கும்.
வழித்தடப் பகுதிகள்
[தொகு]
பாப்பார் ஆறு கடந்து செல்லும் பகுதிகள்:
- பாபகோன் (Babagon)
- போனோபுகான் (Bonobukan)
- புவாயான் (Buayan)
- மத்திய பாப்பார் (Central Papar)
- கிரமத்தோய் (Gramatoi)
- இம்பாங்கனோ (Himpangno)
- கைடுவான் (Kaiduan)
- கலாங்கான் (Kalangan)
- கவாரி (Kawari)
- கோகோபோன் (Kogopon)
- லிங்கான் (Lingan)
- மண்டலிபாவ் (Mandalipau)
- மராகாங் (Marahang)
- படாவான் (Padawan)
- தெரியான் (Terian)
- திக்கு (Tiku)
- உலு பாப்பார் (Ulu Papar)
வரலாறு
[தொகு]இரண்டாம் உலகப் போரின் போது இந்த ஆறும், இதன் குறுக்கே அமைந்துள்ள பாப்பார் தொடருந்து பாலமும் போர்த்திறன் வாய்ந்த முக்கிய இடங்களாகக் கருதப்பட்டன. சப்பானிய இராணுவத்திடமிருந்து வடக்கு போர்னியோவை மீட்டெடுப்பதற்கான நேச நாட்டுப் படைகளின் திட்டங்களில்[4][5] இந்தப் பாலம் முக்கியப் பங்கு வகித்தது.
அந்தக் காலகட்டத்தின் வடக்கு போர்னியோவில் இரகசிய உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் 'அகாஸ்' மற்றும் 'செமுட்' இராணுவ நடவடிக்கைகளின் அறிக்கைகளிலும், 'இசுடாலியன்' மற்றும் 'ஓபோ 6' (Oboe 6) தாக்குதல் திட்டங்களிலும் பாப்பார் ஆறு பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சுற்றுச்சூழல்
[தொகு]பாப்பார் ஆறு சபா மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையில் (Eco-tourism) முக்கியப் பங்கு வகிக்கிறது.
- தகால் முறை: ஆற்றின் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும், மீன் வளத்தை நிலைநிறுத்தவும் உள்ளூர் சமூகங்களால் பாரம்பரிய 'தகால்' பாதுகாப்பு முறை இங்கு பின்பற்றப்படுகிறது.
சுற்றுலா
[தொகு]- சுற்றுலாத் தலங்கள்: இந்த ஆற்றின் கரைகளிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மண்டலிபாவ் வெள்ளை நீர் காட்சிமுனை (Mandalipau White Water View),[6] மொண்டிகாட் மான் முகாம் (Mondikot Deer Camp), மற்றும் ஏஏ முகாம் திடல் (AA Campsite) போன்ற பல சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.
- சாகச விளையாட்டுகள்: ஆற்றின் சில பகுதிகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இயற்கை நடைப்பயணம்; மற்றும் ஆற்றுப் படகு சவாரி போன்ற சாகச நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
காட்சியகம்
[தொகு]- பாப்பார் ஆற்றின் பழைய பாலம்
- பாப்பார் ஆற்றில் மீனவர்கள்
- சல்லே சுலோங் பாலம்
- பாப்பார் ஆற்றின் உட்புறம்
மேலும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Japan International Cooperation Agency" (PDF).
- ↑ "Crocker Range [Data Zone MY020]". BirdLife International. 2003. Retrieved 6 July 2019.
- ↑ "It was in 1968 that the Crocker Range was designated to be a forest reserve. The Crocker Range Nature Park was when established in 1984 in order to protect the water catchments area which was the source of clean drinking water to the entire West Coast and the interior of Sabah". sabah.attractionsinmalaysia.com. Retrieved 10 April 2022.
- ↑ Civil Engineering and Public Works Review. Lomax, Erskine & Company. 1952.
- ↑ "Australian invasion of Borneo in pictures". Asian Railways. Retrieved 7 July 2019.
- ↑ ""Mandalipau White Water View & Fishpond"". sabahtourism. Retrieved 30 July 2026.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் பாப்பார் ஆறு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
