உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பாக்கோயில் கஸ்தூரிரெங்கப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஸ்தூரி ரெங்கப் பெருமாள் கோயில்
பெயர்
பெயர்:கஸ்தூரி ரெங்கப் பெருமாள் கோயில்
அமைவிடம்
ஊர்:பாப்பாக்கோயில்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கஸ்தூரி ரெங்கப் பெருமாள்
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

பாப்பாக்கோயில் கஸ்தூரிரெங்கப் பெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் சாலையில் நாகப்பட்டினத்திற்குத் தென்மேற்கில் 5 கி.மீ. தொலைவில், அந்தணப்பேட்டைக்கு அடுத்தபடியாக உள்ளது.

இறைவன், இறைவி

[தொகு]

மூலவர் சன்னதியில் திருவடி அருகே திருமகளும், நிலமகளும் இருக்க, நாபியில் பிரமன் இருக்க, ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது சயனித்த கோலத்தில் இறைவன் கஸ்தூரிரெங்கப் பெருமாள் என்ற பெயரில் ஒரே கல்லால் ஆன திருமேனியாகக் காட்சியளிக்கின்றார். [1]

அமைப்பு

[தொகு]

ஐந்து நிலை ராஜகோபுரமும், மகாமண்டபமும் கொண்டு கோயில் அமைந்துள்ளது. விநாயகர் விஷ்ணு கணபதியாக உள்ளார். வடபுறத்தில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014