உள்ளடக்கத்துக்குச் செல்

பாபு பரமானந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாபு பரமானந்து (Babu Parmanand) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1999 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 முதல் 2004 ஆம் ஆண்டு சூலை மாதம் 2 ஆம் தேதி வரை இவார் அரியானா மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தார். சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தின் இன்றைய சம்பா மாவட்டத்தில் உள்ள சரோர் கிராமத்தில் 1932 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் தேதியன்று பிறந்தார். 1962 ஆம் ஆண்டில், இராம்கர் தொகுதியிலிருந்து சம்மு காசுமீர் சட்டமன்றத்திற்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு சம்மு மற்றும் காசுமீர் சட்டப் பேரவையின் சபாநாயகராகவும் இருந்தார். இவருக்கு எய்ம்சு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் இராசேந்திர பிரசாத் என்ற மகன் உள்ளார்.[1] 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியன்று தனது 76 ஆவது வயதில் பாபு பரமானந்து காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_பரமானந்து&oldid=3585489" இலிருந்து மீள்விக்கப்பட்டது