பாபு நந்தன்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபு நந்தன்கோடு
பிறப்புதிருவனந்தபுரம், இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்

பாபு நந்தன்கோடு (Babu Nanthankode) தமிழிலும் மலையாளத்திலும் கலைத்தன்மை மிக்க திரைப்படங்களை இயக்கியவர். இவர் அதிகமாகப் பேசப்படாத ஒரு திரை முன்னோடி.

திருவனந்தபுரத்தில் நந்தன்கோடு ஊரில் பிறந்தவர். பூனா திரைப்பள்ளியில் மாணவர். 1970ல் என். சங்கரன்நாயர் இயக்கிய ”மதுவிது” என்ற படத்துக்கு கதை,திரைக்கதை எழுதியிருக்கிறார். அதுவே அவரது திரைப்பட நுழைவு.

1972ல் பாபு எடுத்த முதல் திரைப்படம் தாகம். முத்துராமன், மேஜர் சுந்தரராஜன், நந்திதா போஸ் நடித்த தமிழ்த் திரைப்படம். இது தமிழின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக விமர்சகர்களால் கருதப்படுகிறது. அடையாறு திரைப்பட கல்லூரியில் மாணவர்களுக்கு பாடமாக காட்டப்படும் படங்களில் ஒன்று.

பாபு அடுத்து மலையாளத்தில் 1973ல் ’ஸ்வப்னம்’ படத்தை இயக்கினார். இந்தப்படம் ஒரு குறிப்பிடத்தக்க வணிக வெற்றியும்கூட. காட்சியமைப்புகளிலும் திரைக்கதையிலும் பலவகையான புதிய பாய்ச்சல்கள் சோதனை செய்யப்பட்டிருந்தன. சலீல் சௌதுரி இசை. அசோக் குமார் ஒளிப்பதிவு. பி கேசவதேவின் நாவலை ஒட்டி எடுக்கப்பட்ட படம். நான்கு கேரள அரசு விருதுகளைப்பெற்றது. பாபுவின் அடுத்தபடம் 1974ல் வெளிவந்த யௌவனம். அது தோல்வி அடைந்தது. கரு அளவிலும் செய்நேர்த்தி அளவிலும் அது துணிச்சலான படம் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். 1975ல் வெளிவந்த ’பார்ய இல்லாத ராத்ரி’ வணிக நோக்குள்ள பாலியல் படம். அதுவும் தோல்வியடைந்தது.

பாபு நந்தன்கோடு மீண்டும் தன் பழைய பாணிக்குச் சென்று ’சத்யத்திண்டே நிழலில்’ என்ற படத்தை இயக்கினார். சுதீருக்கு சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருது பெற்றுத்தந்தது அந்தப்படம். ஆனால் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. 1976ல் பாபு நந்தன்கோடு இயக்கிய மான்ச வீண அவருடைய மிகச்சிறந்த படம். வணிக வெற்றி பெறவில்லை. கடைசியாக 1977ல் மீண்டும் ஒரு பாலியல் படம் ‘காமபர்வம். அதுவும் தோல்வி. அதன்பின் பாபு நந்தன்கோடு திரையுலகில் நீடிக்க முடியவில்லை. 1980ல் பாபு அவரது நண்பர் சிவன் எடுத்த யாகம் படத்தில் நடித்தார். அதுவே கடைசி சினிமா தொடர்பு.

படங்கள்[தொகு]

  1. காமபர்வம் (1977)
  2. மானசவீணா (1976)
  3. சத்யத்திண்டே நிழலில் (1975)
  4. பார்ய இல்லாத ராதிரி (1975)
  5. யௌவனம் (1974)
  6. ஸ்வப்னம் (1973)
  7. தாகம் (1972) [தமிழ்]
  8. யாகம் [நடிப்பு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_நந்தன்கோடு&oldid=3383093" இலிருந்து மீள்விக்கப்பட்டது