பாபு ஜனார்த்தனம்
தோற்றம்
பாபு ஜனார்த்தனம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | கா. கோவிந்தன் |
| பின்னவர் | கே. முருகன் |
| தொகுதி | செய்யார் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 27 செப்டம்பர் 1927 செய்யார் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | திருவந்திபுரம் |
| தொழில் | விவசாயி |
பாபு ஜனார்த்தனம் (Babu Janarthanan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் செயாற்றினை சேர்ந்தவர். செய்யாற்றில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் செய்யார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]