பாபுராவ் கோவிந்தராவ் ஷிர்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபுராவ் கோவிந்திராவ் ஷிர்கே
பிறப்பு(1918-08-01)1 ஆகத்து 1918
பசாமி, வய், சாத்தாரா, மகாராட்டிரம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு14 ஆகத்து 2010(2010-08-14) (அகவை 92)
புனே, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்புனே பொறியியல் கல்லூரி
பணிஇவர், பி.ஜி. ஷிர்கே கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனத் தலைவர்
பிள்ளைகள்3,
விருதுகள்பத்மசிறீ 2003

பத்மசிறீ பாபுராவ் கோவிந்தராவ் ஷிர்கே (Baburao Govindrao Shirke) (1918-2010) பிரபலமாக பி. ஜி. ஷிர்கே எனப்படும் இவர் இந்திய தொழிலதிபராவார். இவர், பி.ஜி. ஷிர்கே கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருந்தார். [1]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

பி. ஜி. ஷிர்கே 1918 ஆகத்து 1 ஆம் தேதி சாத்தாரா மாவட்டத்தின் வய் வட்டத்தில் உள்ள பசரானி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவர் ஒரு தாழ்த்தப்பட்டக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். அரசாங்கத்தின் 'சம்பாதித்து கற்றுக்கொள்' திட்டத்தின் மூலம் தனது முறையான கல்வியை முடித்தார். 1936 ஆம் ஆண்டில், பணம் மற்றும் கல்வி வசதிகள் இல்லாத போதிலும், இவர் வயிலுள்ள திராவிட் உயர்நிலைப் பள்ளியில் தனது மெட்ரிகுலேசனை முடித்தார். புனேவிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் (பின்னர் மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) கட்டிடப் பொறியாளார் பட்டம் பெற்றார். மேலும் பசாரானி பகுதியிலிருந்து வந்த முதல் கட்டிடப் பொறியாளார் ஆனார். [2]

தொழில்[தொகு]

இவர் 1944 இல் சுப்ரீம் கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கினார். மேலும் 1945 ஆம் ஆண்டில் கோலாப்பூரின் சிறைச்சாலையை கட்டுவதற்கான திறமையான கட்டுமானராக அங்கீகாரம் பெற்றார். இவரது வணிகம் 1953 க்குப் பிறகு முன்னேறியது. 1972 முதல், தனது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட நிறுவனமான சிபோரெக்ஸ் வழியாக தனது தொழிலை வளைகுடா நாடுகளுக்கு விரிவுபடுத்தினார். [2] 1962 மற்றும் 1981 க்கு இடையில், கிர்லோஸ்கர் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்களில் ஈடுபட்டார். மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலை, மும்பை துடுப்பாட்டச் சங்கத்தின் பாந்த்ரா குர்லா மைதானம், ஹிஞ்சவடி ராஜீவ் காந்தி தொழிற்நுட்ப பூங்கா, சென்னையில் உள்ள விப்ரோ தொழிற்நுட்ப பூங்கா ஆகியவை இவர் நிறைவு செய்த சில முக்கிய திட்டங்களில் சில. [3] இவரது குழுமம் மகாராட்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பல அரசு திட்டங்களை உருவாக்கியுள்ளது. தேசிய விளையாட்டுகளுக்காக 1994 ஆம் ஆண்டு பலேவடியில் சிறீ சிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தை நிர்மாணித்தார்.

விருது[தொகு]

  • 2003 இல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் அர்ப்பணிப்புக்காக இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Padma Shri Shirke no more". sakaaltimes.com. Sakal Media Group. Archived from the original on 28 July 2014. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
  2. 2.0 2.1 "Industrialist Shirke passes away". The Indian Express ltd. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
  3. "Noted industrialist B G Shirke passes away". timesofindia.indiatimes.com/. Bennett, Coleman & Co. Ltd. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.