பாபி கன்னவாலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபி கன்னவாலே
பிறப்புராபர்ட் மைக்கேல் கன்னவாலே
மே 3, 1970 (1970-05-03) (அகவை 53)
யூனியன் நகரம், நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்றுவரை
துணைவர்ரோஸ் பைரன் (2012–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
ஜென்னி லுமெட்
(தி. 1994; ம.மு. 2003)
பிள்ளைகள்3

ராபர்ட் மைக்கேல் கன்னவாலே (Robert Michael Cannavale, பிறப்பு:மே 3, 1970) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் தேர்ட் வாட்ச், போர்டுவாழ்க் எம்பிரே, வினைல், வில் & கிராஸ், ரோபோட் மற்றும் மாஸ்டர் ஒப் நானே போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

வில் & கிராஸ் என்ற தொடரில் வில் ட்ரூமனின் நீண்டகால காதலன் அதிகாரி வின்சென்ட் "வின்ஸ்" என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 2005 ஆம் ஆண்டு நகைச்சுவைத் தொடரில் சிறந்த விருந்தினர் நடிகருக்கான பிரைம் டைம் எம்மி என்ற விருதை வென்றுள்ளார்.[1] 2015 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஆன்ட்-மேன் மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) போன்ற திரைப்படங்களில் 'ஜிம் பாக்ஸ்டன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கன்னவாலே மே 3, 1970 ஆம் ஆண்டு இசபெல் மற்றும் சால்வடோர் என்பவர்களுக்கு மகனாக நியூ ஜெர்சியிலுள்ள யூனியன் நகரில் பிறந்து வளர்ந்தார். அவரது தந்தை இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் தாயார் கியூபன் இனத்தை சேர்ந்தவர். இவர்கள் 1960 இல் குடிபெயர்ந்தனர்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "An Emmy Surprise for 'Will & Grace'". The New York Times. பார்க்கப்பட்ட நாள் May 3, 2020.
  2. "Bobby Cannavale, At Home On Broadway". Fresh Air. NPR. WHYY-FM.
  3. Witchel, Alex (March 29, 2013) Bobby Cannavale, Broadway's Hottest Outsider. The New York Times

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபி_கன்னவாலே&oldid=3205172" இலிருந்து மீள்விக்கப்பட்டது