பாபி அலோசியசு
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், ராம் நாத் கோவிந்த் 2018 இல் பாபி அலோசியசுக்கு தியான் சந்த் விருது வழங்குகிறார். | |
| தனிநபர் தகவல் | |
|---|---|
| தேசியம் | இந்தியர் |
| பிறப்பு | சூன் 22, 1974 செம்பேரி, கண்ணூர், கேரளா, இந்தியா |
| விளையாட்டு | |
| நாடு | |
| விளையாட்டு | தடகள விளையாட்டு |
பாபி அலோசியசு (Bobby Aloysius: பிறப்பு- 22 ஜூன், 1974) கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய தடகள விளையாட்டு வீரர் ஆவார், இவர் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்கிறார். தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். 1995 முதல் 2012 வரை 1.91 மீ. உயரம் தாண்டுதலில் இந்திய மற்றும் தெற்காசிய சாதனைகளை அவர் தக்க வைத்திருந்தார்.[1] பாபி 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றார், 2002 பூசன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் ஜகார்த்தா ஆசிய வெற்றி வாகைப் போடியில் தங்கப் பதக்கம் வென்றார்.[2][3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பாபி இந்தியா கேரளா கண்ணூரில் உள்ள செம்பேரியில் பிறந்தார். பாபி பல முறை உலகம் முழுவதும் பயணம் செய்தார், இறுதியில் 2009 வரை ஐக்கிய இராச்சியத்தின் சுரூஸ்பரியில் வசித்தார். 2013 வரை திருவனந்தபுரத்தில் கேரள மாநில விளையாட்டு கவுன்சிலின் உதவி (தொழில்நுட்ப) செயலாளராகவும் பணியாற்றினார். மருநாடன் டிவி என்ற இணைய தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செய்தி வாசிப்பாளருமான சாஜன் ஸ்காரியாவை மணந்தார். இவர்களுக்கு ஸ்டீபன் ஹோல்ம் ஸ்காரியா, கங்கோத்ரி ஸ்காரியா மற்றும் ரித்விக் ஸ்காரியா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். பாபி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.[4]
தொழில் வாழ்க்கை
[தொகு]2004 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியின் போது பெண்கள் உயரம் தாண்டுதலில் பாபி 1.91m என்ற தேசிய சாதனையைப் படைத்தார். "நான் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற விரும்பினேன், சென்னையில் அந்த தாவலில் எல்லாவற்றையும் செலுத்தி 1.91m தேர்ச்சி பெற்றேன்" என்று அவர் 2011 இல் மகாராஜா விளையாட்டரங்கத்தில் ஒரு நேர்காணலில் கூறினார். 2012 இல் லண்டன் ஒலிம்பிக்கில் சஹனா குமாரி 1.92 மீட்டர் தூரம் தாண்டும் வரை இவரது தேசிய சாதனை தோல்வியடையவில்லை.[5] பாபி தனது சர்வதேச வெற்றிகளுடன் 2003 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தேசிய உள்நாட்டு சுற்று சந்திப்பில் பெண்கள் உயரம் தாண்டுதல் போட்டியையும் வென்றார்.[6]
| ஆண்டு | போட்டி | இடம் | நிலை | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| Representing | ||||
| 2000 | ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | ஜகார்த்தா, இந்தோனேசியா |
முதலிடம் | 1.83 மீ |
| 2002 | பொதுநலவாய விளையாட்டுக்கள் | மான்செஸ்டர், ஐக்கிய இராச்சியம் |
நான்காமிடம் | 1.87 மீ |
| ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | கொழும்பு, இலங்கை |
இரண்டாமிடம் | 1.84 மீ | |
| ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | புசான், தென் கொரியா |
இரண்டாமிடம் | 1.88 மீ | |
| 2003 | ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | மணிலா, பிலிப்பைன்சு |
நான்காமிடம் | 1.80 மீ |
| அஃப்ரோ ஆசிய விளையாட்டுப் போட்ட்கள் | ஐதராபாத், இந்தியா |
இரண்டாமிடம் | 1.88 மீ | |
| 2004 | ஆசிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் | டெஹ்ரான், ஈரான் |
இரண்டாமிடம் | 1.81 மீ |
| கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் | ஏதென்சு, கிரீசு |
28 ஆமிடம் (வெளியேற்றம்) | 1.85 மீ | |
பாபி தனது மாநிலத்தில் விளையாட்டு வளர்ச்சியை மேம்படுத்த கேரள மாநில அரசடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கேரள மாநில விளையாட்டு கவுன்சிலின் உதவி செயலாளராக (தொழில்நுட்பம்) பணியாற்றிய பாபி, 2011 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள விளையாட்டு கழகத்தின் உயரம் தாண்டுதல் திருவிழாவை பாபி ஏற்பாடு செய்தார், இதில் தடகள வீரர்கள் கனமான இசைக்கு விளையாட்டை நிகழ்த்தினர். அவர் தனது பணிக்காலத்தில் போது மேல்நிலை விளையாட்டுக்கான இணைய ஒதுக்கீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். 2013 ஆம் ஆண்டில், அவர் தனது பணித் துறப்புக் கடிதத்தை கே. எஸ். எஸ். சி. க்கு சமர்ப்பித்தார், ஏனெனில் அவர்கள் தேசிய விளையாட்டு அலுவலகத்தில் நியமிக்கப்படுவதற்கான உத்தரவை நிறுத்தி வைத்து அதற்கான வாய்ப்பை இவருக்கு வழங்க மறுத்ததாகக் கூறினார்.[7]
விருதுகள்
[தொகு]தியான் சந்த் விருது பல முறை விண்ணப்பித்து, அதைப் பெறும் வாய்ப்பை இழந்த பிறகு, பாபிக்கு இறுதியாக 2018 இல் விருது வழங்கப்பட்டது. செப்டம்பர் 25 அன்று குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு இந்த விருதை வழங்கினார்.[8] தனது நேர்காணல் ஒன்றில், "இந்த முறை அதை வெல்வது எனக்கு அதிர்ஷ்டம். தியான் சந்த் விருது 2002. நிறுவப்பட்டதிலிருந்து நான் இந்த கவுரவத்திற்கு விண்ணப்பித்து வருகிறேன், இது இன்னும் தீவிரமான பயிற்சி எடுத்துக் கொள்ள என்னை ஊக்குவிக்கும். என் கீழ் ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு நயனா ஜேம்ஸ் என்னை விட்டு வெளியேறிய பின், நான் பயிற்சியை நிறுத்திவிட்டேன். இப்போது. நான் மீண்டும் தீவிர பயிற்சிக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளேன்".
குறிப்புகள்
[தொகு]- ↑ "It's Bobby Aloysius' day". தி இந்து (Chennai, India). 4 June 2002 இம் மூலத்தில் இருந்து 27 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101027081710/http://www.hindu.com/2002/06/04/stories/2002060402852000.htm. பார்த்த நாள்: 22 January 2010.
- ↑ "The Olympics: 2004: Athletics: Newi student falls short in heats.". 27 August 2004 இம் மூலத்தில் இருந்து 2 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121102231458/http://www.highbeam.com/doc/1G1-121352623.html. பார்த்த நாள்: 22 January 2010.
- ↑ "Bobby Aloysius scales to a surprise gold". தி இந்து (Chennai, India). 30 August 2000 இம் மூலத்தில் இருந்து 4 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604105540/http://www.hindu.com/2000/08/30/stories/07300113.htm. பார்த்த நாள்: 22 January 2010.
- ↑ "Department of Physical Education". University of Calicut. Archived from the original on 29 January 2009. Retrieved 22 January 2010.
- ↑ "Sahana Kumari qualifies for London Olympics". The Times of India. June 23, 2012. Retrieved 2019-07-27.
- ↑ "ATHLETICS: Kerala's Bobby Aloysius Who won the women's High Jump event at the National Domestic... | The Hindu Images". thehinduimages.com. Retrieved 2019-07-27.
- ↑ Tam, Kenneth; Hoz Salvador, Martin; McAlpine, Ken; Basile, Rick; Matsugu, Bruce; More, Josh (2013), "Extended UTM Functionality", UTM Security with Fortinet, Elsevier, pp. 249–305, doi:10.1016/b978-1-59-749747-3.00007-7, ISBN 9781597497473
{{citation}}: Missing or empty|url=(help) - ↑ "Bobby Aloysius receives the Dhyan Chand Award 2018 for her..." Getty Images (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). October 2018. Retrieved 2019-07-27.