பாபிலோன் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபிலோன் கோட்டை

பாபிலோன் கோட்டை (Babylon Fortress) எகிப்தின் நைல் கழிமுகத்தில் பாபிலோன் எனப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட தொன்மையான கோட்டையாகும். இன்றைய நாட்களில் கோப்திய கெய்ரோ எனப்படும் இடத்தில் இது அமைந்துள்ளது. நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் பாரோவிய கால்வாய் (டாலமி கால்வாய், டிராஜானின் கால்வாய் என்றும் அழைக்கப்பெறும்) துவங்குமிடத்தில் அமைந்துள்ளது.

கீழ் எகிப்திற்கும் நடுவண் எகிப்திற்கும் எல்லையில் இக்கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. நைல் ஆற்றின் மேற்புறம் செல்வோரும் கீழ்ப்புறம் செல்வோரும் சுங்கவரி செலுத்த வேண்டியிருந்தது. இதனைத் தொடக்கத்தில் கிமு 525இல் பாபிலோனிய விசுவாசிகள் கட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது. உரோமானியர்கள் தங்கள் வழக்கப்படி சிவப்பு,வெள்ளை பட்டைகளுடன் ஆற்றுக்கருகில் புதிய கோட்டையைக் கட்டினர்.

கோட்டையினுள்ளே கோப்திய அருங்காட்சியகமும் கன்னிமாடமும் பல கிறித்தவக் கோவில்களும் உள்ளன; புனித ஜோர்ஜின் கோவிலும் தொங்கு தேவாலயமும் இந்தக் கோட்டையினுள்தான் உள்ளன.

பாபிலோன் கோட்டையின் ஒளிப்படங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  • Richard Talbert, Barrington Atlas of the Greek and Roman World, (ISBN 0-691-03169-X), p. 74.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபிலோன்_கோட்டை&oldid=2697740" இருந்து மீள்விக்கப்பட்டது