உள்ளடக்கத்துக்குச் செல்

பாபர் (சீர்வேக ஏவுகணை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபர் ஏவுகணை

பாபர் ஏவுகணை (Babur, உருது: بابر) பாகிஸ்தான் நாட்டின் தேசிய அபிவிருத்தி மையம் தயாரித்த ஏவுகணை ஆகும். இவ்வேவுகணைக்கு முகலாய மன்னர் பாபரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் நாட்டின் முதல் சீர்வேக ஏவுகணை ஆகும். இதன் தாக்கும் திறன் 700 கிலோமீட்டர்கள் ஆகும். மேலும் இந்த ஏவுகணை ரேடர்களால் கண்டுபிடிக்க முடியாதபடி செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.[1][2][3] 2005 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இவ்வேவுகணை தயாரிக்கப்பட்டு வருகிறது..[4] இதன் உயரம் 6.25 மீட்டர்கள், விட்டம் 0.52 மீட்டர்கள் ஆகும். இதன் மொத்த எடை 1500 கிலோகிராம்கள் ஆகும். இதில் 300 கிலோகிராம் வெடிபொருளைச் சுமந்து செல்லும் ஆற்றல் உடையது. இதன் வேகம் 800 கிலோமீட்டர்கள்/மணி ஆகும். இதன் இயந்திரங்களின் எரிபொருட்கள் திட மற்றும் திரவ எரிபொருட்கள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Babur cruise missile test
  2. "Jane's Strategic Weapon Systems". Archived from the original on 2008-12-06. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.
  3. Babur Enhanced Range
  4. "Babur missile". Archived from the original on 2007-12-11. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபர்_(சீர்வேக_ஏவுகணை)&oldid=3562760" இலிருந்து மீள்விக்கப்பட்டது