பான் சிங் தோமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பான் சிங் தோமர்
Paan Singh Tomar.png
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியா
பிறந்த இடம்பிந்த்(Bhind), மத்தியப் பிரதேசம்
இறந்த நாள்1 அக்டோபர் 1981 (அகவை 48–49)
இறந்த இடம்ரதிபுரா, மத்தியப் பிரதேசம்
உயரம்6 ft 1 in (1.85 m) [1]
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)3000 மீட்டர்கள் தடை தாண்டி ஓட்டம்
 
பதக்கங்கள்
 இந்தியா

பான் சிங் தோமர் (1932 - அக்டோபர் 1, 1981) ஓர் இந்திய இராணுவ வீரர், விளையாட்டு வீரர் மற்றும் ஒரு போராளி ஆவார். இவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தபோது ஓடுவதில் இவருக்கிருந்த திறமை அறியப்பட்டது. 1950 - 1960 களுக்கு இடைப்பட்ட காலத்தில் steeplechase பந்தயத்தில் 7 முறை தேசிய வாகையாளரான இவர் 1958 -ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டுள்ளார். தனது பணிக்கால முடிவிற்கு முன்னரே இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று தனது கிராமத்திற்கு திரும்பினார். தன் கிராமத்தில் குடும்பப் பகையால் உண்டான நிலத்தகராறினால் கொள்ளைக்காரனாகி சம்பல் பள்ளத்தாக்கு குழுக் கொள்ளையனாக தீய வழியில் பரவலாக அறியப்பட்டார். 1981-ம் ஆண்டு இந்திய சட்ட நடைமுறைபடுத்தும்(Indian law enforcement) அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Paan Singh Tomar". Who was this man?. பார்த்த நாள் 3 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்_சிங்_தோமர்&oldid=2227345" இருந்து மீள்விக்கப்பட்டது