பான் குபானோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பான் குபானோ என்பது கியூபர்களால் தயாரிக்கப்படும் ஒருவகை ரொட்டி ஆகும். அமைப்பில் பகெத்தை ஒட்டிய பான் குபானோ தயாரிப்பு விதத்தில் கொஞ்சம் மாறுபடுகிறது. அமெரிக்காவில் வாழும் கியூபர்களின் விருப்பமான உணவான கியூப சான்விச்சைத் தயாரிக்க இது உதவுகிறது.[1][2]

பான் குபானோ
கியூப சான்விச்சுகள்
வகைரொட்டி
தொடங்கிய இடம்அமெரிக்கா
பகுதிபுளோரிடா
ஆக்கியோன்லா யோவன் பிரான்சிஸ்கா அடுமனை
முக்கிய சேர்பொருட்கள்மாவு, நீர், கொழுப்பு

தயாரிப்பு[தொகு]

பாரம்பரியமாக தயாரிக்கப்படும் கியூப உரொட்டிகள் மூன்றடி நீளமும் செவ்வக வடிவமும் கொண்டவை. மொறுமொறுப்பான வெளிப்புறமும் மிருதுவான உட்புறமும் கொண்டவை இவ்வகை ரொட்டிகள்.[3]

கியூப ரொட்டியில் பன்றிக்கொழுப்பு அல்லது காய்கறிச் சாறு சேர்க்கப்படுவதனால் அது பிற ரொட்டிகளில் இருந்து மாறுபடுகிறது. பாரம்பரியமாகவே பதனப்பொருள் ஏதும் சேர்க்காமல் தயாரிக்கப்படுவதால், கியூப ரொட்டிகள் விரைவாகவே கெட்டுப் போவன. விரைவாக சாப்பிடாவிட்டால் வறண்டும் போவன.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கியூப ரொட்டி - வேமார்க்கிங்".
  2. "கியூப ரொட்டி தோன்றிய விதம் - எஸ்பி டைம்ஸ்".
  3. "கியூப ரொட்டிகளின் வரலாறு - பிரெட்மேக்கர்". Archived from the original on 2008-12-24. பார்க்கப்பட்ட நாள் 2021-05-08.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "கியூப சான்விச் ரெசிப்பி - வாட்ஸ் குக்கிங் அமெரிக்கா".
  5. "லா செங்கண்டாவின் கெடாத ரொட்டிகள் - சில்தாம்ப்பா".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்_குபானோ&oldid=3484011" இலிருந்து மீள்விக்கப்பட்டது