பான் அமெரிக்க நெடுஞ்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை.

அமெரிக்காக்களுக்கிடை நெடுஞ்சாலை அல்லது பான் அமெரிக்க நெடுஞ்சாலை (Pan American Highway, போர்த்துகேயம்: Rodovia / Auto-estrada Pan-americana, எசுப்பானியம்: Autopista / Carretera / Ruta Panamericana) வட தென் அமெரிக்காக்களுக்கிடையே அமைக்கப்பட்டுள்ள ஒரு சாலைகள் வலையமைப்பாகும் இதனது மொத்த நீளம் 47.958 கிலோ மீட்டர்கள் (29,800 மைல்) ஆகும். பனாமா கொலம்பியா நாடுகளின் எல்லையில் தாரியன் இடைவெளி எனப்படும் மழைக்காடுகள் நிறைந்த 159 கிலோமீட்டர்கள் (99 மைல்) தொலைவைத் தவிர, இந்த நெடுஞ்சாலை அமைப்பு இரு அமெரிக்காக்களின் முதன்மை நாடுகளை இணைக்கிறது.

கின்னஸ் உலக சாதனைகளில், பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை உலகின் மிக நீளமான "வாகனம் செல்லும் சாலை"யாகக் குறிக்கப்பட்டுள்ளது. எனினும், தாரியன் இடைவெளி இருப்பதனால் இதனை வழக்கமான மோட்டார் வாகனத்தில் தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா இடையே கடக்க முடியாது.

பான் அமெரிக்க நெடுஞ்சாலை அமைப்பு கண்ணோட்டம்[தொகு]

வடக்கு பான் அமெரிக்க நெடுஞ்சாலை 9 நாடுகள் வழியாக பயணம்:

தெற்கு பான் அமெரிக்க நெடுஞ்சாலை 9 நாடுகள் வழியாக பயணம்: