பானோத் சந்திரவதி
Appearance
பானோத் சந்திரவதி Dr. Chandravathi | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 ஆகத்து 1983 கம்மம் |
அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி (2014–முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (2014 வரை) |
பெற்றோர் | இராமமூர்த்தி (தந்தை) |
வாழிடம் | கம்மம் |
கல்வி | மருத்துவம் |
முன்னாள் கல்லூரி | ஆந்திர மருத்துவக் கல்லூரி, விசாகப்பட்டினம் |
பனோத் சந்திரவதி (Banoth Chandravathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தெலங்காணா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் கம்மம் மாவட்டத்தில் உள்ள வைரா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினை சார்ந்த இவர் ஏப்ரல் 2014-ல், பாரத் இராட்டிர சமிதி கட்சியில் சேர்ந்தார்.
இளமை
[தொகு]பனோத் சந்திரவதி பழங்குடி சமூகமான லம்பாடாவில் பிறந்தார். 2007-ல் ஆந்திரா மருத்துவக் கல்லூரி, விசாகப்பட்டினத்தில் மருத்துவப் படிப்பினை முடித்தார்.[2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]சந்திரவதி 2009-ல் சட்டசபைக்கு உறுப்பினராக்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் இளைய சட்டமன்ற உறுப்பினர் இவர் ஆவார்.[3] இவர் 2011-ல் தனது பால்ய நண்பரான சுரேஷை மணந்தார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]# | முதல் | வரை | பதவி | பார்ட்டி |
---|---|---|---|---|
1. | 2009 | 2014 | வைரா சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். | இபொக |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "The Hindu : Andhra Pradesh News : Protection of T resources stressed". www.hindu.com. Archived from the original on 21 February 2011. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ Chandravathi Banoth - Telangana. https://ceotelangana.nic.in/GE_2009/AFFIDAVITS/Affidavits_AC/115_2%20Chandravathi.Banoth.pdf.
- ↑ "Car parking row in House". https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Car-parking-row-in-House/article15997675.ece.