உள்ளடக்கத்துக்குச் செல்

பானேசுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானேசுவர்
Baneswar
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பெங்காலி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

பானேசுவர் (Baneswar) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கூச்பெகர் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய நகரமாகும் [1].

பானேசுவர் நகர சிவன் கோவில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாகும். இக்கோவிலுக்கு அருகிலுள்ள குளத்தில் வாழ்கின்ற ஆமைகளும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

பானேசுவர் என்ற சொல் பான்+ஈசுவர் என்ற சொற்களில் இருந்து பிறந்ததாகும். பான் என்பவர் அசுரர்களின் அரசர் ஆவார். அவர் 'சிவ லிங்கத்தை' வெளியே கொண்டுபோய் பாதாள உலகில் வைப்பதன் மூலம் சிவனையும் அங்கு கொண்டு செல்ல முயற்சித்தார். அவருடைய முயற்சி தோல்வியில் முடிந்தது. இன்று பார்க்கின்ற சிவபெருமான் ஆலயத்தில் சிவலிங்கம் உறுதியாக நின்றதாக நம்பப்படுகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமன்றி பல வெளியூர் பக்தர்களும் பிரார்த்தனைக்காக இங்கு வருகின்றனர். தோபோட்ரோ அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக சிவன் மேளாவைக் (சிவ சதுர்த்தியின் போது) கொண்டாடுகிறது.

பானேசுவர் நகரம் கூச் பெகர் (12 கிலோமீட்டர்) மற்றும் அலிபுர்துவார் (13 கிலோமீட்டர்) நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Baneswar". One Five Nine. பார்க்கப்பட்ட நாள் 29 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானேசுவர்&oldid=2164920" இலிருந்து மீள்விக்கப்பட்டது