உள்ளடக்கத்துக்குச் செல்

பானெரோசோயிக் பேரூழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானெரோசோயிக் பேரூழி
541 ± ± 1.0 – 0 Ma
காலக்கோடு
−550 —
−500 —
−450 —
−400 —
−350 —
−300 —
−250 —
−200 —
−150 —
−100 —
−50 —
0 —
 
Subdivision of the Phanerozoic according to the ICS, as of 2024.[1]
Vertical axis scale: Millions of years ago
முன்னையது[[]]
பின்னையது[[]]
சொற்பிறப்பு
Name formalityFormal
தகவல்கள்
Celestial bodyEarth
Regional usageICS
Time scale(s) usedICS கால அளவை
வரைவிலக்கணம்
காலவரிசை அலகுஊழி
பாறைஅடுக்கியல் அலகுEonothem
முதலில் முன்மொழிந்தவர்George Halcott Chadwick, 1930
Time span formalityFormal
Lower boundary definitionAppearance of the Ichnofossil Treptichnus pedum
Lower boundary GSSPFortune Head, நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், கனடா
47°04′34″N 55°49′52″W / 47.0762°N 55.8310°W / 47.0762; -55.8310
Lower GSSP ratifiedAugust 1992 (as base of Cambrian)[2]:5
Upper boundary definitionN/A
Upper boundary GSSPN/A
Upper GSSP ratifiedN/A

பானெரோசோயிக் பேரூழி (The Phanerozoic {{efn|/ˌfænərəˈz.ɪk, ˌfænrə-, -r-/ FAN-ər-ə-ZOH-ik.[3][4][5] ) என்பது பூமியின் புவியியல் கால அளவுகோலில் உள்ள நான்கு பெரு ஊழிகளில் இறுதியாக அமைந்துள்ளதாகும். இதன் காலம் 541 ± 1.0 மில்லியன்ஆண்டுகளிலிருந்து, இன்று வரை உள்ள காலப்பகுதி என அறிவியலாளர்கள் வகுத்துள்ளனர். பேரூழிக்காலங்களில் முதலில் ஏடியனும், இரண்டாவதாக ஆர்க்கியனும், மூன்றாவதாக புரோடெரோசோயிக் பேரூழியும் அமைந்துள்ளன. அதனாலேயே, பானெரோசோயிக் என்று பெயரிட்டுள்ளனர். இந்த கிரேக்கச் சொல்லுக்கு, "தென்படும் உயிர்" என்பது பொருள் ஆகும். நான்காவதாக அமைந்துள்ள இப்பேரூழியில், கண்களுக்குத் தெரியக்கூடிய அளவிலான, பெரிய உயிரினங்கள் முதன்முதலில் தோன்றியதாகக் கண்டறிந்துள்ளனர்.

உயிர்களின் தோற்றம்

[தொகு]

இக்காலத்திற்கு முன்பு உயிரினங்கள் பெரும்பாலும் மென்மையான உடலைக் கொண்டிருந்தன; இக்காலத்தில்தான் கடினமான ஓடுகள் மற்றும் எலும்புகள் கொண்ட உயிரினங்கள் தோன்றின. வளிமண்டலத்திலும், கடலிலும் உயிர்வளி அளவு அதிகரித்தது, இவ்வளவு பெரிய அளவிலான பரிணாம வளர்ச்சிக்கு ஒரு முக்கியத் தூண்டுகோலாக அமைந்தது. கேம்பிரியன் வெடிப்பால், இன்று பூமியில் வாழும் பெரும்பாலான முக்கிய விலங்குத் தொகுதிகள் (Phyla) முதன்முதலில் இக்காலகட்டத்தில்தான் தோன்றின. இந்த உயிரிப் பெருக்கும் முழுவதும், முதலில் பெருங்கடலிலேயே நிகழ்ந்தது; அப்போது நிலப்பரப்பில் தாவரங்களோ, விலங்குகளோ தோன்றவில்லை. நிலப்பரப்பில் காடுகள் உருவானது; ஒளிச்சேர்க்கை மூலம் வளிமண்டலத்தில் உயிர்வளி அளவு சீரானதும் இக்காலகட்டத்தில்தான் நிகழ்ந்தது. மீன்கள், நிலநீர் வாழ்விகள், ஊர்வன (டைனோசர்கள் உட்பட), பறவைகள், பாலூட்டிகள் என முதுகெலும்புள்ள விலங்குகளின் பரிணாம வளர்ச்சி மேலோங்கியது. ஐந்து முறை பெரும் உயிரின அழிவுகள் (Mass Extinctions) ஏற்பட்டுள்ளன, இதில் டைனோசர்களின் அழிவும் அடங்கும். மனிதர்களின் தோற்றம், வளர்ச்சி இறுதிக்கட்டதில் நிகழ்ந்தது.

இதன் பகுதிகள்

[தொகு]

இது தொல்லூழி (Paleozoic), இடையூழி (Mesozoic) மற்றும் புதுஉயிர் ஊழி (Cenozoic) என மூன்று ஊழிகளாகப் (Eon) பிரிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "International Chronostratigraphic Chart" (PDF). International Commission on Stratigraphy. December 2024. Retrieved October 23, 2025.
  2. Brasier, Martin; Cowie, John W.; Taylor, Michael (March–June 1994). "Decision on the Precambrian-Cambrian boundary stratotype". Episodes 17 (1–2): 3–8. doi:10.18814/epiiugs/1994/v17i1.2/002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0705-3797. இணையக் கணினி நூலக மையம்:4130038. https://stratigraphy.org/gssps/files/fortunian.pdf. பார்த்த நாள்: October 9, 2025.  open access publication - free to read
  3. "Phanerozoic".. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 
  4. "Phanerozoic". Merriam-Webster Dictionary.
  5. "Phanerozoic". Dictionary.com Unabridged. Random House.

இவற்றையும் காணவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானெரோசோயிக்_பேரூழி&oldid=4445914" இலிருந்து மீள்விக்கப்பட்டது