பானு முஷ்டாக்
பானு முஷ்டாக் Banu Mushtaq | |
---|---|
பிறப்பு | 3 ஏப்ரல் 1948 ஹாசன், மைசூர் மாநிலம், இந்தியா |
தொழில் | எழுத்தாளர், செயற்பாட்டாளர், வழக்கறிஞர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பன்னாட்டு புக்கர் பரிசு (2025) |
பானு முஷ்டாக் (Banu Mushtaq, ಬಾನು ಮುಷ್ತಾಕ್, பிறப்பு: 1948) என்பவர் தென்னிந்திய மாநிலமான கருநாடகத்தைச் சேர்ந்த ஒரு களப்பணியாளர், வழக்கறிஞர், எழுத்தாளர் ஆவார். இவர் கன்னட மொழியில் எழுதுகிறார். இவரது படைப்புகள் உருது, இந்தி, தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன.[1] தீபா பாஸ்தி மொழிபெயர்த்த இவரது சிறுகதைத் தொகுப்பான ஹார்ட் லாம்ப் 2025 ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு புக்கர் பரிசை வென்றது.[2]
துவக்ககாலமும் தனிப்பட்ட வாழ்க்கையும்
[தொகு]பானு 1948-ஆம் ஆண்டு கருநாடகத்தின் ஹாசனில் ஒரு முசுலிம் குடும்பத்தில் பிறந்தார்.[3] பானுவுக்கு எட்டு வயது ஆகும்போது சீமக்காவில் கிறித்தவ மறைபணியாளர்களால் நடத்தப்படும் ஒரு கன்னட மொழிப் பள்ளியில் சேர்க்க வந்தபோது "ஆறு மாதங்களில் கன்னடத்தைப் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்" என்ற நிபந்தனையின் பேரில் பள்ளியில் இடம் அளிக்கபட்டது. சில நாட்கள் பள்ளிக்குச் சென்ற நிலையில் கன்னடத்தில் எழுதத் தொடங்கி, பள்ளி நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தார்.[4] இவருடைய சமூக எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, பல்கலைக்கழகத்தில் படித்து 26 வயதில் காதல் திருமணம் செய்து கொண்டார்.[5] இவருக்கு கன்னடம், இந்தி, தக்னி உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசத்தெரியும்.[5]
தொழில்
[தொகு]பானு முன்பு லங்கேஷ் பத்திரிகே [5] செய்தித்தாளின் செய்தியாளராக இருந்தார். சில மாதங்கள் பெங்களூருவில் உள்ள அனைத்திந்திய வானொலியில் பணியாற்றினார்.[3]
எழுத்துப் பணி
[தொகு]பானு சிறு வயதிலிருந்தே எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆனால், இவர் தன் 29 வயதில் மகப்பேற்றிற்குப் பிந்தைய மனச் சோர்விலிருந்து வெளிவர எழுதத் துவங்கி எழுத்தாளராக மாறினார். தனது உணர்வுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்த எழுத்துப் பணியில் ஈடுபட்டார். இவரது எழுத்துக்களில் பெரும்பாலானவை பெண்களின் சிக்கல்களை மையமாகக் கொண்டுள்ளன.[5]
பானுவின் கரி நகரகலு கதையைத் தழுவி 2003 ஆம் ஆண்டு ஹசினா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.[5]
2022 ஆம் ஆண்டு பானுவின் படைப்புகளை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.[5]
தீபா பாஸ்தி தென்னிந்திய முஸ்லிம் சமூகங்களின் பின்னணியில், 12 பெண்களை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பை ஹார்ட் லேம்ப் என்கிற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவரது இந்தச் சிறுகதை மொழிபெயர்ப்பு நூலானது - 2025 பன்னாட்டு புக்கர் பரிசுக்கான இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.[6] இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள கதைகளானவை 2019 முதல் 2023 வரை எழுதப்பட்டு வெளியிடப்பட்டவையாகும்.[5] பானுவே புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் கன்னட எழுத்தாளர் ஆவார்.[4]
பானு இதுவரை, ஆறு சிறுகதைத் தொகுதிகள், ஒரு புதினம், ஒரு கட்டுரைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். [7]
செயற்பாடு
[தொகு]பானு 1980களில் இருந்து, கருநாடகத்தில் "அடிப்படைவாதம், சமூக அநீதிகளை" எதிர்த்துச் செயல்படும் இயக்கங்களில் ஈடுபட்டுவருகிறார்.[8]
பானு "முசுலீம் பெண்கள் மசூதிகளுக்குள் செல்லும் உரிமையை ஆதரித்ததற்கு" பதிலடி கொடுக்கும் விதமாக, 2000 ஆம் ஆண்டில், பானுவும் அவரது குடும்பத்தினரும் மூன்று மாதங்கள் "சமூகப் புறக்கணிப்புக்கு" ஆளானார்கள்.[8]
2000-களின் முற்பகுதியில், சிக்மகளூர் மாவட்டத்தின் பாபா புதன்கிரியில் உள்ள ஒரு புனிதத் தலத்துக்கு முஸ்லிம்கள் செல்வதைத் தடுக்கும் முயற்சிகளை எதிர்த்து பானு குடிமை சமூகக் குழுவான கோமு சௌஹார்த வேதிகேவில் இணைந்தார்.[8] கர்நாடகத்தில் பள்ளிகளில் முசுலிம் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்ற தடையை எதிர்த்து, ஹிஜாப் அணியும் உரிமையையும் பானு ஆதரித்தார்.[8]
விருதுகளும் அங்கீகாரங்களும்
[தொகு]- கர்நாடக சாகித்ய அகாதமி விருது (1999)[9]
- தான சிந்தாமணி அத்திமாபே விருது[9]
- தீபா பாஸ்தியின் ஹசீனா மற்றும் பிற கதைகளின் மொழிபெயர்ப்புக்காக 2024 பி.இ.என். ஆங்கில மொழிபெயர்ப்பு விருது [10]
- தீபா பாசுதி[11] மொழிபெயர்த்த ஹார்ட் லேம்ப் என்ற சிறுகதை தொகுதியானது 2025 பன்னாட்டு புக்கர் பரிசு பெற்றது[12][13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Authors: Banu Mushtaq". And Other Stories. 4 December 2024. Retrieved 27 March 2025.
- ↑ Marshall, Alex (20 May 2025). "Banu Mushtaq's Heart Lamp, a Story Collection, Wins International Booker Prize". The New York Times. https://www.nytimes.com/2025/05/20/books/review/international-booker-prize-winner.html.
- ↑ 3.0 3.1 "Muslim patriarchs – I prefer to call them Muslim fascist forces: Banu Mushtaque (interview)". New Age Islam. 17 August 2010. Retrieved 27 March 2025.
- ↑ 4.0 4.1 Sathish, G. T. (2025-03-04). "Firebrand writer Banu Mushtaq, and her International Booker Prize-longlisted anthology, Heart Lamp" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/kannada-author-banu-mushtaq-international-booker-prize-longlist-heart-lamp-short-stories-translation-deepa-bhasthi/article69268894.ece.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Sharma, Kanika (2025-03-01). "Banu Mushtaq wrote Heart Lamp for 33 years. Now, it's nominated for the International Booker Prize". Vogue India (in Indian English). Retrieved 2025-03-27.
- ↑ Creamer, Ella (8 April 2025). "'Mind-expanding books': International Booker prize shortlist announced". The Guardian. Retrieved 8 April 2025.
- ↑ "Authors: Banu Mushtaq". The Booker Prizes. Retrieved 27 March 2025.
- ↑ 8.0 8.1 8.2 8.3 "'In Karnataka, Cultural Practices Basavanna Fought Against Are Getting Reintroduced'". article-14.com. Retrieved 2025-03-27.
- ↑ 9.0 9.1 Creamer, Ella (25 February 2025). "All 13 writers on International Booker longlist are first-time nominees". தி கார்டியன். https://www.theguardian.com/books/2025/feb/25/all-13-writers-on-international-booker-longlist-are-first-time-nominees.
- ↑ "Collection of Banu Mushtaq's short stories translated into English wins PEN English Translate award". தி இந்து. 2024-07-18. https://www.thehindu.com/news/national/karnataka/collection-of-banu-mushtaqs-short-stories-translated-into-english-wins-pen-english-translate-award/article68418815.ece.
- ↑ Marshall, Alex (8 April 2025). "International Booker Prize Shortlist: 6 Books to Talk About". New York Times. https://www.nytimes.com/2025/04/08/books/international-booker-prize-shortlist.html.
- ↑ Marshall, Alex (8 April 2025). "International Booker Prize Shortlist: 6 Books to Talk About" (in en). New York Times. https://www.nytimes.com/2025/04/08/books/international-booker-prize-shortlist.html.
- ↑ "Booker Prize for Banu Mushtaq: Celebrations in Hassan as Kannada Author Wins Prestigious Award". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2025-05-21.