பானு ஜகாங்கீர் கோயாஜி
| பிறப்பு | 7 செப்டம்பர் 1917 |
|---|---|
| இறப்பு | 15 சூலை 2004 (அகவை 86)
|
| துறை | மருத்துவம் |
| Alma mater | கிராண்ட் மருத்துவக் கல்லூரி |
| அறியப்பட்டது |
|
| பரிசுகள் |
பானு ஜஹாங்கீர் கோயாஜி (Banoo Jehangir Coyaji)- பிறப்பு:7 செப்டம்பர், 1917-15 ஜூலை 2004) ஒரு இந்திய மருத்துவரும் குடும்பக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாட்டு ஆர்வலரும் ஆவார். புனேவில் உள்ள கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை இயக்குநராக இருந்த பானு, இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலமான மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் சமூக சுகாதார ஊழியர்களின் திட்டங்களைத் தொடங்கினார். இவர் மத்திய அரசின் ஆலோசகராகவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணராகவும் உள்ளார்.
வாழ்க்கை வரலாறு.
[தொகு]பானு பெஸ்டன்ஜி கபாடியா 1917 செப்டம்பர் 7 அன்று மும்பையில் ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பெஸ்டன்ஜி கபாடியா நன்கு அறியப்பட்ட கட்டடப் பொறியாளராக இருந்தார். இளம் வயதிலேயே, பானு தனது தாத்தா பாட்டியுடன் வசிக்க புனே அனுப்பப்பட்டார். அங்கு இவர் செல்வ வசதியுடன் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்தார். அவரது பெற்றோரின் தொடர்ச்சியான வருகைகள் மற்றும் அவரது தாத்தா பாட்டிகளுடனான நெருங்கிய உறவு ஆகியவை நிறைவான குழந்தைப் பருவத்தை வாழ வழிவகுத்தன.[2]
கல்வி
[தொகு]பானு தனது தாத்தா பாட்டியுடன் வாழ்ந்தபோது, அனைத்து சிறுவர்கள் பள்ளியான செயின்ட் வின்சென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த முதல் பெண் ஆனார். மேலும் அவர் இயேசு மற்றும் மேரி கான்வென்ட்டிலும் பயின்றார், அங்கு இவர் பெரும்பாலும் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.[3][2] கான்வென்ட்டில் தனது பள்ளிப்படிப்புக்குப் பிறகு, பானு சீனியர் கேம்பிரிட்ஜ் எனப்படும் படிப்பை எடுத்து ஐந்து வகுப்புகளில் தனித்துவத்துடன் தேர்ச்சி பெற்றார். அவர் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் முன்-மருத்துவத்திற்கு கல்வி பயின்றார். பின்னர் கிராண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவம் பயின்றார், அங்கு இவர் 1940 இல் மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்றார். பானு புகழ்பெற்ற டாக்டர் வி. என். சிரோட்கருடன் உண்டு உறைவிடக்கல்வி பயின்ற போது ஒரு மகளிர் மருத்துவ நிபுணராக பயிற்சி பெற்றார், ஆனால் 1943 இல் புனேவுக்குத் திரும்பியபோது டாக்டர் எடுல்ஜி கோயாஜியின் கீழ் பொது மருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்தார்.[2]
திருமணம்
[தொகு]1937 ஆம் ஆண்டில் பானு மகாபலேசுவருக்குச் சென்றபோது, அவரது வருங்கால கணவர் ஜகாங்கீர் கோயாஜிக்கு பானுவின் வழிகாட்டியும் ஜகாங்கீரின் சகோதரருமான எடுல்ஜி கோயாஜி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். ஜகாங்கிர் வணிக ரீதியாக ஒரு பொறியியலாளராக இருந்தார்; அச்சமயத்தில் பர்டூ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தார்.. பானுவும் ஜகாங்கீரும் காதலிக்கத் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 24,1941 அன்று திருமணம் செய்து கொண்டனர். ஆகஸ்ட் 7,1942 அன்று, இந்த தம்பதியினருக்கு குருஸ் என்ற முதல் குழந்தை பிறந்தது. 1943 ஆம் ஆண்டில், அவர்கள் புனேவில் ஒரு வீட்டைக் கட்டி அங்கு குடியேறினர்.[2]
தொழில் வாழ்க்கை
[தொகு]ஏப்ரல் 1944 இல், சர்தார் மூட்லியர், புனேவில் அமைந்துள்ள ஒரு சிறிய தாய்வழி பராமரிப்பு மருத்துவமனையை (KEM) எடுத்துக் கொள்ளும் திறன் கொண்ட ஒரு உயர் பயிற்சி பெற்ற மருத்துவரைப் பரிந்துரை செய்யுமாறு டாக்டர் எடுல்ஜி கோயாஜியிடம் கேட்டுக்கொண்டார்.[4] டாக்டர் எடுல்ஜி கோயாஜி டாக்டர் பானு ஜஹாங்கீர் கோயாஜியை இந்த வேலைக்கு பரிந்துரைத்தார், ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர் தலைமை மருத்துவ அதிகாரி பதவியை ஏற்றார்.[4] இந்த பதவியில் தனது 55 ஆண்டுகளில், பானு மருத்துவமனையை 1944 இல் 40 படுக்கைகளிலிருந்து 1999 இல் 550 படுக்கைகளாக உயர்த்தினார். அவர் கே. இ. எம்-ஐ ஒரு கற்பித்தல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக மாற்றினார், மேலும் பி. ஜே. மருத்துவக் கல்லூரி ஒரு இணைப்பை நிறுவினார்.[3]
பானு 1972 ஆம் ஆண்டில் வடு என்ற இடத்தில் ஒரு ஆரம்ப சுகாதார மையத்தையும் உருவாக்கினார், அது இறுதியில் அருகிலுள்ள கிராமப்புறங்களுக்கு சேவை செய்யும் மருத்துவமனையாக வளர்ந்தது. 1977 ஆம் ஆண்டில், கிராமப்புற சமூக சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை அவர் உருவாக்கினார். சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் சுமார் 600 சிறுமிகளுக்கு பயிற்சி அளித்தார், இதனால் அவர்கள் தங்கள் சமூகங்களுக்கு உதவ முடியும்.[3] காலப்போக்கில், பானூவின் செயல்பாடு நாடு முழுவதும் உள்ள இடங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், பல இளம் பெண்கள் மற்றும் தாய்மார்களின் கல்வி மற்றும் தொழிலாளர் திறன்களின் பற்றாக்குறையை பானு உணர்ந்தார். இந்த நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, அவர் 1988 இல் இளம் பெண்கள் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை நிறுவினார். இந்தத் திட்டம் இளம் பெண்களுக்கு வாசிப்பு மற்றும் பூவேலைப்பாடு போன்ற தேவையான திறன்களைக் கற்பிப்பதையும், சாதி மற்றும் பாலினப் பிரச்சனைகளைப் பற்றிய உரையாடல்களுடன் இந்த திறன்களைச் சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது.[3]
பானு மனித இனப்பெருக்கத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு, உலக சுகாதார அமைப்பு, பெண்கள் சுகாதாரம் மற்றும் மேம்பாடு, சுகாதாரம், உலக சுகாதார அமைப்பின் மனிதவளம் மற்றும் மேம்பாடு துறையில் உறுப்பினராக இருந்தார். மகாராட்டிரா அரசு, இந்திய அரசு, உலக வங்கி, ஃபோர்டு அறக்கட்டளை, ஐக்கியநாடுகள் கூட்டமைப்பின் மக்கள்தொகை நிதியம் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல அமைப்புகளுக்கு ஆலோசகராக இருந்தார். அவர் மேலாண்மைக் குழுவில் உறுப்பினராகவும், புனே பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் இருந்தார். குடும்பக் கட்டுப்பாடு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் ஆகிய துறைகளில் அவரது முக்கிய பங்களிப்பு உள்ளது.[5]
விருதுகளும் அங்கீகாரமும்
[தொகு]- 1989-பத்ம பூஷண் [6]
- 1992-புன்யபூஷன் விருது [7]
- 1993-பொது சேவைக்கான ரமோன் மகசேசே விருது [8]
ஆர்வங்கள்
[தொகு]பானு தனது தந்தையிடமிருந்து அவருக்கு அனுப்பப்பட்ட இலக்கியத்தில் தொடர்ந்து ஆர்வம் கொண்டிருந்தார். சாகல் குழுமச் செய்தித்தாள்களில் அதன் இயக்குநராக 30 ஆண்டுகளாக ஈடுபட்டதன் மூலம் அவர் இந்த ஆர்வத்தைத் தொடர்ந்தார்.[8][9] இது தவிர, 1994 ஆம் ஆண்டில் புனே பல்கலைக்கழகம் மற்றும் எஸ். என். டி. டி பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் கௌரவப் பட்டங்களைப் பெற்றார்.[8]
அவர் ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்ட்டில் இருந்த காலத்தில் மேற்கத்திய பாரம்பரிய இசையையும் கற்றுக்கொண்டார், மேலும் அவரது தாத்தா பாட்டியின் வீட்டில் பியானோ வாசிப்பதை ரசித்தார். லண்டனின் டிரினிட்டி இசைக் கல்லூரியில் தேர்வர்களுக்காக பானு இசை நிகழ்ச்சி நடத்தினார்.[2]
இலக்கியம் மற்றும் இசையைத் தவிர, பானு தனது கணவர் ஜகாங்கீருடன் விருந்துகள் மற்றும் பால்ரூம் நடனங்களில் கலந்து கொள்வதையும் விரும்பினார்.[4]
குறிப்புகள்
[தொகு]மேலும் வாசிக்க
[தொகு]- இந்திரா குப்தா, இந்தியாவின் 50 மிகவும் புகழ்பெற்ற பெண்கள், புதுடெல்லிஃ ஐகான் பப்ளிகேஷன்ஸ், 2003, ISBN பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88086-03-7
வெளி இணைப்புகள்
[தொகு]- சமூக சேவகர் பானு கோயாஜி காலமானார், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜூலை 15,2004
- 1993 பொது சேவைக்கான ரமோன் மகசேசே விருது
- ↑ "Dr. Banoo Coyaji (1917-2004)". King Edward Memorial Hospital. Archived from the original on 8 August 2013. Retrieved 31 August 2013.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Johri, Meera. (2010). Greatness of spirit : profiles of Indian Magsaysay award winners. Delhi: Rajpal & Sons. ISBN 9788170288602. கணினி நூலகம் 588507605.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Anusandhan.net, Indian S & T Portal". www.anusandhan.net. Archived from the original on 12 August 2020. Retrieved 2019-04-26.
- ↑ 4.0 4.1 4.2 "Welcome to KEM Hospital". www.kemhospital.org. Archived from the original on 8 August 2013. Retrieved 2019-04-26.
- ↑ "Social worker Banoo Coyaji dead". rediff.com. Retrieved 31 August 2013.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 21 July 2015.
- ↑ "Punyabhushan Foundation | Tridal Pune | Punyabhushan.com | Dr. Satish Desai". punyabhushan.com. Retrieved 2019-04-23.
- ↑ 8.0 8.1 8.2 "Social worker Banoo Coyaji passes away". The Times of India. Archived from the original on 8 March 2012. Retrieved 31 August 2013.
- ↑ S. K. Aggarwal (1989). Media Credibility. Mittal Publications. pp. 228–. ISBN 978-81-7099-157-1.