பானு அத்தையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானு அத்தையா
பிறப்புபானுமதி அன்னசாஹெப் ரஜோபாத்யா
28 ஏப்ரல் 1929 (1929-04-28) (அகவை 94)
கோலாப்பூர், கோலாப்பூர்மாநிலம், பிரித்தானியாவின் இந்தியா
(தற்போது மகாராட்டிரம்)
பணிஆடைகலன் வடிவமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1956-2004
வாழ்க்கைத்
துணை
சத்யேந்திர அத்தையா (பிரிந்தனர், இப்போது விதவை)
பிள்ளைகள்மகள்
விருதுகள்1982: சிறந்த ஆடை வடிவமைப்பு: காந்தி
சிறந்த ஆடை வடிவமைப்பு
1991: லேகின்...
2002: லகான்

பானு அத்தையா னீ ராஜோபாத்யா (Bhanu Athaiya) (மராத்தி: भानु अथैय्या; பிறப்பு ஏப்ரல் 28, 1929) ஒரு இந்திய ஆடைகலன் வடிவமைப்பாளர். 1950 முதல் ஆடைகலன் வடிவமைப்பாளராக, 100 திரைப்படங்களுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார். இவர் இந்திய திரைப்பட இயக்குநர்கள் குரு தத், யஷ் சோப்ரா, ராஜ் கபூர் (இந்தி நடிகர்), அஷுடோஷ் கோவரிகெர் மற்றும் சர்வதேச இயக்குநர்கள் கான்ரட் ரூக்ஸ், ரிச்சர்ட் ஆட்டன்பரோ போன்றவர்களின் படங்களுக்கு ஆடைகலன் வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் 1956இல் "சி. ஐ. டி."(1956) திரைப்படத்தில் ஆடைகலன் வடிவமைப்பாளராக அறிமுகமானார்.[1] அதைத்தொடர்ந்து இயக்குநர் குரு தத்தின் படங்களான "பியாஸா" (1957), "சாத்வின் கா சந்த்" (1960) மற்றும் "ஷாகிப் பீபி ஆர் குலாம்" (1962) போன்றவற்றில் பணிபுரிந்துள்ளார். 50 வருட தொழில் வாழ்க்கையில் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். 1982இல் காந்தி திரைப்படத்திற்காக அகாதமி விருது ஜான் மோலோவுக்கும் இவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.அகாதமி விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எனப் போற்றப்படுகிறார்.[1][2] இவர் இரண்டு முறை 1991[3] மற்றும் 2002[4] ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா, ஆடைகலன் வடிவமைப்பிற்காகப் பெற்றுள்ளார்.

மார்ச்சு,2010இல் இவர் "தி ஆர்ட் ஆஃப் காஸ்டியூம் டிசைன்" என்கிற புத்தகத்தை எழுதினார். இது ஹார்பெர் கோலின்ஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.[5] சனவரி 13, 2013இல் இப் புத்தகத்தின் ஒரு பிரதியை தலாய் லாமாவிற்கு கொடுத்தார்.[6][7]

2012,பிப்ரவரி 23 இல் பானு அத்தையா தனது அகாதமி விருதினை "தி அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட் அன்டு சயின்ஸ்"ற்கு திருப்பித்தரவுள்ளதாக செய்தி வெளியானது. ஏனென்றால் அவரது மறைவிற்குப்பின் அவ்விருதை அவரது குடும்பத்தினரால் காப்பாற்ற முடியாது என்று அவர் நினைத்தார்.[8] திசம்பர் 15, 2012இல் இச் செய்தி உண்மையென வெளியானது.[9]

இளமைப்பருவம்[தொகு]

"பானுமதி அன்னாசாஹேப் ராஜோபாத்யா" மகாராட்டிரம் மாநிலம், கோலாப்பூரில் பிறந்தார். இவர் அன்னாசாஹேப் - சாந்தாபாய் ராஜோபாத்யாவிற்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தார். இவரின் தந்தை ஒரு ஓவியர். பானு அத்தையாவின் ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார்[10]

தன் இளம் வயதில் வீட்டிலேயே ஓவிய ஆசிரியரின் மூலம் ஓவியம் கற்றுக்கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் மும்பையிலுள்ள "சர் ஜெ. ஜெ. ஸ்கூல் ஆஃப் ஆர்ட்" கல்லூரியில் சேர்ந்தார். அதில் நுண்கலை பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். "பிரான்ஸிஸ் நியூட்டன் சௌசா" நிறுவிய "புரோகரசிவ் ஆர்டிஸ்ட் குரூப்" பின் உறுப்பினர் ஆவதற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

தொழில்[தொகு]

அத்தையா மும்பையில் "ஈவ்ஸ் வீக்லி"போன்ற பெண்கள் பத்திரிகைகளில் நவீன ஆடைகளைப் பற்றி எழுதுபவராகத் தன் தொழிலைத் தொடங்கினார். பின்னர் "ஈவ்ஸ் வீக்லி"யின் ஆசிரியர் மூலம் ஆடை வடிவமைப்பதில் கவனம் செலுத்தினார். அது அவரது முன்னேற்றத்திற்கான பாதையை வழிவகுத்தது. இயக்குநர் குரு தத்தின் படமான "சி. ஐ. டி." (1956)மூலம் ஆடைகலன் வடிவமைப்பாளராக திரையுலகுக்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து குரு தத்தின் அனைத்து படங்களிலும் இவர் பணியாற்றினார்.[11] 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில், அவரது பணிக்கு நன்கொடை வழங்கப்பட்டது. [மேற்கோள் தேவை]

சொந்த வாழ்க்கை[தொகு]

பானு அத்தையா இந்தி திரைப்பட பாடலாசிரியரான சத்யேந்திர அத்தையாவை மணந்து கொண்டார். ஆனால் அவர்களது திருமணம் பிரிவில் முடிந்தது. அத்தையா மறுமணம் செய்துகொள்ளவில்லை. இவர்களது பெண் தற்போது குடும்பத்தினருடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். அத்தையா தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

விருதுகளும் பரிந்துரைகளும்[தொகு]

வருடம் விருது திரைப்படம் தகுதி Ref.
1983
(55th)
சிறந்த ஆடைகலன் வடிவமைப்பிற்காக அகாதமி விருது காந்தி வெற்றி [12]
1983
(36th)
சிறந்த ஆடைகலன் வடிவமைப்பிற்கான பி ஏ எப் டி ஏ விருது காந்தி பரிந்துரை [13]
1991
(38th)
சிறந்த ஆடைகலன் வடிவமைப்பிற்கான தேசிய திரைப்பட விருது லெகின்... வெற்றி [3]
2002
(49th)
சிறந்த ஆடைகலன் வடிவமைப்பிற்கான தேசிய திரைப்பட விருது லகான் வெற்றி [4]
2009
(54வது)
பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது வெற்றி [14]
2013
(4th)
லாடி வாழ்நாள் சாதனையாளர் விருது வெற்றி [15]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Chatterjee, Madhusree (20 February 2009). "Bhanu Athaiya - India's first Oscar winner walks down memory lane". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 27 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227010346/http://www.hindustantimes.com/News-Feed/archive/Bhanu-Athaiya-India-s-first-Oscar-winner-walks-down-memory-lane/Article1-381412.aspx. பார்த்த நாள்: 3 May 2013. 
  2. "From dandy to Dandi, it was a long journey". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 3 May 2013.
  3. 3.0 3.1 "38th National Film Awards". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-03.
  4. 4.0 4.1 "49th National Film Awards". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original on 2013-12-24. பார்க்கப்பட்ட நாள் 2013-05-03.
  5. "The Art of Costume Design, by Bhanu Rajopadhye Athaiya". HarperCollins Publishers India. Archived from the original on 4 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 May 2013.
  6. "No one will fight China to make a stand for Tibet". Phayul.com. Archived from the original on 2 May 2013. பார்க்கப்பட்ட நாள் 3 May 2013.
  7. "Athaiya meets Dalai Lama". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 16 June 2013. பார்க்கப்பட்ட நாள் 3 May 2013.
  8. Singh, Lada (23 February 2012). "First Indian to win an Oscar, Bhanu Athaiya wants to return her award". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://indiatoday.intoday.in/story/first-indian-to-win-an-oscar-bhanu-athaiya-wants-to-return-her-award/1/174950.html. பார்த்த நாள்: 3 May 2013. 
  9. Ghosh, Avijit (15 December 2012). "Bhanu Athaiya returns Oscar fearing theft". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 16 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130616000540/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-15/india/35836042_1_finest-motion-picture-museum-bhanu-athaiya-costume-designer. பார்த்த நாள்: 3 May 2013. 
  10. Lala, Smita (7 May 2008). "My Fundays: Bhanu Athaiya". The Telegraph இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121017071643/http://www.telegraphindia.com/1080507/jsp/telekids/story_9233599.jsp. பார்த்த நாள்: 3 May 2013. 
  11. Guru Dutt: A Life in Cinema, by Nasreen Munni Kabir. Published by Oxford University Press, 1996. ISBN 0-19-563849-2. pp 117-118.
  12. "The 55th Academy Awards (1983) Nominees and Winners". Academy of Motion Picture Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 2013-05-02.
  13. "Film in 1983 - BAFTA Awards". British Academy of Film and Television Arts. பார்க்கப்பட்ட நாள் 2013-05-02.
  14. "Filmfare: 'Jodha...' bags 5, Priyanka, Hrithik shine". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (The Times Group). 1 March 2009. http://timesofindia.indiatimes.com/home/specials/filmfare/Filmfare-Jodha--bags-5-Priyanka-Hrithik-shine/articleshow/4205152.cms. பார்த்த நாள்: 11 July 2013. 
  15. "NGO to honour Bhanu Athaiya with Lifetime Achievement award". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (The Times Group). 21 January 2013 இம் மூலத்தில் இருந்து 27 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130527105726/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-21/news-interviews/36461870_1_special-award-bhanu-athaiya-gender-sensitivity. பார்த்த நாள்: 11 July 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhanu Athaiya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானு_அத்தையா&oldid=3845118" இலிருந்து மீள்விக்கப்பட்டது