பானுசாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானுசாலி
மொழிகள்குசராத்தி, கச்சு, மராத்தி, இந்தி, சிந்தி
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
குசராத்து, மகாராட்டிரம்
உட்பிரிவுகள்கோரி, பத்ரா, ஜோய்சர், கஜ்ரா, மாஞ்ஜி, சேட்

பானுசாலி (Bhanushali) ஒரு இந்து சமூகம் ஆகும். பெரும்பான்மையானவர்கள் இந்திய மாநிலமான குசராத்தின் கச்சு மாவட்டத்தில் வசிக்கின்றனர். சிலர் சௌராட்டிரா பகுதியிலும் குசராத்தின் பிற பகுதிகளிலும் வசிக்கின்றனர்.[1] சிலர் மகாராட்டிராவின் தானே மற்றும் மும்பை பகுதிகளுக்கும் சென்று வசிக்கின்றனர். இவர்கள் மராத்தி மொழி பேசுகின்றனர்.

வரலாறு[தொகு]

பானுசாலிகள் முக்கியமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆவர்.[2] இவர்கள் தங்களை சத்திரிய வம்சாவளியினர் என்று கூறினாலும்[3] ஹிங்குலாஜ் மாதாவை வணங்கியதன் அடிப்படையில் பானுசாலிகள் குசராத்திலிருந்து குடிபெயர்ந்ததாக ஜோதிந்திர ஜெயின் கருதுகிறார். லோஹானாக்களும் பானுசாலிகளும் குசராத்திற்கு குடிபெயர்வதற்கு முன்பு ஒரே இனமாக வாழ்ந்தவர்கள் என ஜெயின் நம்பினார்.

சமூகங்கள்[தொகு]

பானுசாலிகள் தற்போது தாங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து இரண்டு துணைக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். குச்சி பானுசாலி சமூகம் (கச்சு பிராந்திய வம்சாவளியினர்) மற்றும் ஹலாய் பானுசாலி சமூகம் (ஹலார் - ஜாம்நகர் பகுதியில் வம்சாவளியைக் கொண்டுள்ளனர்).[4]

தொழில்[தொகு]

பானுசாலிகள் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது.

மதம்[தொகு]

பானுசாலிகள் தங்கள் குலப்பெயர்கள் / குடும்பப்பெயர்களின்படி வெவ்வேறு குலதெய்வங்களை வணங்குகிறார்கள்.[5] இவர்கள் இந்து மத பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பின்பற்றுகிறார்கள்.[6] இவர்கள் வீர் தாதா ஜாஷ்ராஜை வணங்குகிறார்கள். லோஹானாஸைப் போலவே, இவர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள். பானுசாலிகள் முக்கியமாக ஹிங்லாஜை வழிபடுகிறார்கள். இவர்களின் முக்கிய கோயிலான ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோயில் இவர்களின் மூதாதையர் வாழ்ந்த பலுச்சிசுத்தானில் உள்ளது.[3]

லோஹானாஸ்[தொகு]

பானுசாலிகள் சிந்துவில் உள்ள தங்கள் ஆரம்பக்கால வசிப்பிடங்களை லோஹானாஸுடன் பகிர்ந்து கொண்டனர்.[3] லோஹானாஸைப் போலவே, பானுசாலிகளும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். லோகனாஸைப் போலவே இவர்கள் தாதா ஜாஷ்ராஜை தங்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள். பல பானுசாலிகளின் குடும்பப்பெயர்களும் லோஹானா சமூகத்தினரிடையே காணப்படுகின்றன.

குறிப்பிடத்தக்க பானுசாலிகள்[தொகு]

  • சியாம்ஜி கிருஷ்ண வர்மா, மாண்ட்வி கட்ச் பகுதியைச் சேர்ந்த பானுசாலி சமூகத்தின் இந்தியப் புரட்சிப் போராளி
  • ஓதவ்ராம், பானுசாலி குலத்தினரின் கல்வி முன்னோடி, வழிகாட்டி
  • தவானி பானுசாலி, இந்தியப் பாடகி[7]
  • ஜெய் பானுசாலி, இந்தியத் தொலைக்காட்சி நடிகர்[8]
  • கிசோர் பானுசாலி, இந்திய நகைச்சுவை நடிகர்[9]
  • சித்தார்த் பானுசாலி, இந்திய யூடியூபர்[10]
  • வினோத் பானுசாலி, நிறுவனர் - பானுசாலி ஸ்டுடியோஸ் லிமிடெட் (பிஎஸ்எல்) & ஹிட்ஸ் இசை
  • பவின் பானுசாலி, இந்திய நடிகர்
  • மருத்துவர் தவல் ஜி பானுசாலி, நியூயார்க் நகரத்தில் உள்ள தோல் மருத்துவர்

மேற்கோள்கள்[தொகு]

  1. Gillow, John (2008). Indian Textiles. Thames & Hudson. பக். 221. https://archive.org/details/indiantextiles0000gill. 
  2. Fischer-Tiné, Harald (2015). Shyamji Krishnavarma: Sanskrit, Sociology, Anti-Imperialism. பக். 3. https://www.google.com/books/edition/Shyamji_Krishnavarma/OKbbCgAAQBAJ?hl=en&gbpv=1&dq=Bhanushali+kshatriya&pg=PA3&printsec=frontcover. 
  3. 3.0 3.1 3.2 Jain, Jyotindra. Folk art and culture of Gujarat: guide to the collection of the Shreyas Folk Museum of Gujarat. 
  4. Bhanushalis Samaj (2018). "About Bhanushalis Community பரணிடப்பட்டது 2019-08-09 at the வந்தவழி இயந்திரம்".
  5. . 2010. 
  6. Urmi Chanda-Vaz (January 20, 2018). "Indian millennials are embracing religious and spiritual tattoos, as indigenous cultures reject them".
  7. "Dhvani Bhanushali Official YouTube Channel". YouTube.
  8. "Jay Bhanushali IMDb Page". IMDb.
  9. "Kishore Bhanushali IMDb Page". IMDb.
  10. "Siddharth Bhanushali Official YouTube Channel". YouTube.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானுசாலி&oldid=3668138" இலிருந்து மீள்விக்கப்பட்டது