பானு
பானு Bhanu Raja Bhanu | |||||
---|---|---|---|---|---|
மாதரம் அரசர் | |||||
ஆட்சிக்காலம் | 752—775 | ||||
முன்னையவர் | ? | ||||
பின்னையவர் | தருமசேது (Maharaja Wisnu) | ||||
|
|
பானு அல்லது சைலேந்திர பானு (இந்தோனேசியம்: Bhanu; ஜாவானியம்: Bhanu) என்பவர் மத்திய ஜாவாவில், மாதரம் இராச்சியம், சைலேந்திர வம்சத்தின் நிறுவனர் மற்றும் சைலேந்திர வம்சத்தின் முதல் மன்னரும் ஆவார்.[1]:92
இவரின் ஆட்சிக்காலம் 752 – 775 என்று சில சான்றுகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், இந்தக் கால அளவின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்த வேண்டிய இலக்கில் உள்ளது.
வரலாறு
[தொகு]சூலை 24, 750 அன்று, மத்திய ஜாவா,திரிகிராம்வியாமா (Trigramwyama), அம்பரான் கிராமத்தில் இலவச நிலத்தை நன்கொடையாக வழங்கிய தலைவர் பானு என்று பிளம்பூங்கான் கல்வெட்டில் (Plumpungan Inscription)[2] காணப்படுகிறது.
இந்த நன்கொடை, சங்க சீதாதேவி (Sang Siddhadewi) ஒப்புதலின் பேரில், சங்க ஈசா (Sang Isa) தெய்வத்தின் மீதான பக்திக்காக வழங்கப்பட்டது என்றும் கல்வெட்டின் பதிவில் உள்ளது. பிளம்பூங்கான் கல்வெட்டு சலதிகா (Salatiga) பிளம்பூங்கான் கிராமத்தில் 1900-ஆம் ஆண்டுகளில் கண்டெடுக்கப்பட்டது.
பிளம்பூங்கான் கல்வெட்டு மன்னர் பானுவால் வெளியிடப்பட்டது. இதுவரை கண்டெடுக்கப்பட்ட பழைய ஜாவானிய எழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகளில், மிகப் பழமையான கல்வெட்டாக பிளம்பூங்கான் கல்வெட்டு அறியப்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
- ↑ "Mantyasih Inscription editorial photo. Image of prasasti - 150425806". Dreamstime (in ஆங்கிலம்). Retrieved 27 January 2025.
சான்றுகள்
[தொகு]- Poesponegoro & Notosusanto. 1990. Sejarah Nasional Indonesia Jilid II. Jakarta: Balai Pustaka
- Purwadi. 2007. Sejarah Raja-Raja Jawa. Yogyakarta: Media Ilmu
- Slamet Muljana. 2006. Sriwijaya (terbitan ulang 1960). Yogyakarta: LKIS