உள்ளடக்கத்துக்குச் செல்

பானி பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானி பாசு
பானி பாசு
பிறப்பு11 மார்ச்சு 1939 (1939-03-11) (அகவை 86)
தேசியம்இந்தியன்
பணிஎழுத்தாளர், ஆங்கிலப் பேராசிரியர்

பானி பாசு (Bani Basu ) (பிறப்பு: 1939 மார்ச் 11 [1] ) இவர் ஓர் சிறந்த வங்காள இந்திய எழுத்தாளரும், கட்டுரையாளரும், விமர்சகரும், கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும் மற்றும் பேராசிரியரும் ஆவார். நன்கு அறியப்பட்ட லேடி பிராபோர்ன் கல்லூரி, இசுகாட்டிசு தேவாலயக் கல்லூரி மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தனது முறையான கல்வியைப் பெற்றார். அங்கு ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொழில்

[தொகு]

பாசு, 'ஜன்மபூமி மாத்ரிபூமி' என்ற புதினத்தின் மூலம் ஒரு எழுத்தாளாரக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு சிறந்த எழுத்தாளரான இவர் 1980 முதல் அசல் எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முதலில் "ஆனந்தமாலா", ஒரு இளைஞர்களுக்கான இதழ், பின்னர் "தேஷ்" மற்றும் அந்தக் காலத்தில் வெளிவந்த இதழ்களில் எழுதி வந்தார். இப்போது ஒரு புதின ஆசிரியராக இவர் சிறுகதை, கட்டுரை, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக எழுதுகிறார். இவரது சில புனைகதைகள் திரைப்படங்கள் & தொலைக்காட்சித் தொடராக உருவாக்கப்பட்டுள்ளன. <ref>"Basu, Bani".</ref

படைப்புகள்

[தொகு]

இவரது புனைகதைகளின் பரந்த அளவு பாலினம், வரலாறு, புராணம், சமூகம், உளவியல், இளமை, இசை, பாலியல் நோக்குநிலை, அமானுஷ்யம் மற்றும் பலவற்றைக் கையாள்கிறது. இவரது முக்கிய படைப்புகளில் ஸ்வெட் பதேரர் தலா , ஏகுஷே பா , மைத்ரேயா ஜடகா ( ஸ்ட்ரீ எழுதிய மைத்ரேயாவின் பிறப்பு என வெளியிடப்பட்டது), காந்தர்வி, பஞ்சம் புருஷ் மற்றும் அஷ்டம் கர்பா போன்றவை . இவருக்கு அண்டர்காட் (தேசத்துரோகம்) தாராசங்கர் விருதும், மைத்ரேய ஜடகாவுக்கு ஆனந்த புரஷகார் விருது வழங்கப்பட்டது. சுசீலா தேவி பிர்லா விருது மற்றும் சாகித்யா சேது புரஸ்கார் ஆகியவற்றையும் இவர் பெற்றுள்ளார். இவர் வங்காளத்திற்கு விரிவாக மொழிபெயர்த்து கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் கவிதை எழுதுகிறார்.

குறிப்புகள்

[தொகு]

பெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானி_பாசு&oldid=3305791" இலிருந்து மீள்விக்கப்பட்டது