உள்ளடக்கத்துக்குச் செல்

பானியேலி போரு அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பானியேலி போரு அருவி (மலையாளம் : പാണിയേലി പോര്) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு பாறை அமைப்புகளால் பெரியாறின் ஓட்டத்தில் இயற்கையான இடையூறால் சிறந்த காட்சியமைப்பு உள்ளது.

பாறை அமைப்புகளுக்கு சற்று முன்பு வரை ஆழமற்றும், அகன்றும் இருக்கும் இந்த ஆறு, பெரிய பாறைகளில் சில குறுகிய பிளவுகள் வழியாகவும், பெரிய பாறைகளின் மீது பாய்வதாலும், இங்கு அதன் உந்தம் அதிகரித்து, பெரும் கொந்தளிப்பு ஓட்டத்தை உருவாக்குகிறது. ஆயினும்கூட, இந்த கொந்தளிப்பு மேற்பரப்பில் தெரியாது.

இந்தப் பெயரின் சரியான பொருளில் குறிப்பிடப்படும் அருவியாக இது இல்லை என்றாலும், நீரும் பாறைகளும் இணைந்து எர்ணாகுளம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் கொஞ்சம் அறியப்பட்ட இடமாக பனியேலி போரு அழகிய காட்சியைகளை உருவாக்குகின்றது. பெரம்பவூரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள மலையாத்தூர் வனப்பகுதிகளில் அமைந்திருக்கும் இந்த இடம் பார்வையாளரை மயக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இயற்கையின் சிறப்பை விரும்பி இரசிப்பவர்களுக்கு உண்மையில் இது ஒரு கவர்ச்சியான இடம் ஆகும்.

இந்த இடம் உலகெங்கிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. என்றாலும், இந்த இடத்திற்கு வரும் போது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஏனெனில் இப்பகுதியில் ஏராளமான விபத்துக்கள் மற்றும் இறப்புகள் நடந்துள்ளன. கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்த சுற்றுலா தலப் பகுதியில் கிட்டத்தட்ட 89 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தற்போது சுற்றுலாத்துறையாலும், உள்ளூர் தன்னார்வலர்களான "வான சமரக்ஷன சமதி"யாலும் எச்சரிக்கை அடையாள பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. [1]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானியேலி_போரு_அருவி&oldid=3845597" இலிருந்து மீள்விக்கப்பட்டது