பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Panipat Refinery), இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு சொந்தமான இப்பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பானிப்பட் நகரத்திற்கு அருகே பகோலி (Baholi) எனுமிடத்தில் அமைந்துள்ளது. 1998ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இவ்வாலை இந்தியன் ஆயில் கார்பரேசனின் 7வது ஆலை ஆகும்.[1] இதுவே தெற்காசியாவின் ஒருங்கிணைந்த பெரிய பெட்ரோலியத் தொழிற்சாலை ஆகும்.
இவ்வாலையை நிறுவ ரூபாய் 3868 கோடி செலவானது.[2]இவ்வாலை துவக்கத்தில் ஆண்டிற்கு 6 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தது. தற்போது இவ்வாலை ஆண்டிற்கு ரூபாய் 4165 கோடி மதிப்புள்ள 12 மில்லியன் டன் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, நெய்தை, கற்கரி, எரிநெய், அசுபால்ட்டு, கந்தகம், வானூர்தி எரிபொருள், செயற்கை உரங்கள் மற்றும் நெகிழி தயாரிக்க தேவையான பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Panipat Refinery | Petroleum Refinery | IndianOil". iocl.com. Retrieved 2021-03-28.
- ↑ "Panipat Oil Refinery, Haryana - Hydrocarbons Technology". www.hydrocarbons-technology.com. Retrieved 2022-05-12.
- ↑ Panipat Refinery & Petrochemical Complex