பானபாகா லட்சுமி
டாக்டர் பானபாகா லட்சுமி | |
---|---|
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009–2014 | |
முன்னவர் | டகுபதி புரந்தேசுவரி |
பின்வந்தவர் | மால்யத்ரி சிரிராம் |
தொகுதி | பபத்லா மக்களவைத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 6, 1958 கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | பனபாகா கிருட்ணய்யா |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
இருப்பிடம் | நெல்லூர் |
As of மே 12,, 2006 Source: [1] |
டாக்டர் பானபாகா லட்சுமி (Panabaka Lakshmi; பிறப்பு: அக்டோபர் 6, 1958) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சரும் (2004-2014) ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் பப்பாட்லா தொகுதியைச் சேர்த்த இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
டாக்டர். பனாபக லட்சுமி, நெல்லூர் மாவட்டம் (ஆந்திரப்பிரதேசம்), கவாலி என்ற இடத்தில் பிறந்தார். டாக்டர். கிருட்ணய்யாவைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
தொழில்[தொகு]
நெல்லூரில் இருந்து 11, 12, 14 வது மக்களவைக்கும், மற்றும் பபத்லாவில் இருந்து 15 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் யு.பி.ஏ. அரசாங்கத்தில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (2004-09), பெட்ரோல் இயற்கை எரிவாயு அமைச்சகம், சவுளித் துறை அமைச்சகம் (2009-14) ஆகியவற்றிற்கு மாநில அமைச்சராக இருந்தார்[1].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Minister of State". Ministry of Petroleum and Natural Gas. 17 September 2013 அன்று பார்க்கப்பட்டது.