பானகம்
பானகம் தமிழர் திருவிழாக்களின்போது செய்யப்படும் குடிபானம் ஆகும். வெல்லத்தை மாவாக்கி, ஏலக்காயை நசுக்கி நீரில் கலந்து பானகம் செய்வர். ஊர்ப்புறங்களில் கோயில் திருவிழாக்களின்போதும் செய்யப்படும்
ம், ராம நவமி அன்று செய்து படைக்கும் வழக்கம் உண்டு. இது, வெல்லம், எலுமிச்சை, ஏலக்காய்,சுக்கு, பச்சை கற்பூரம் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும்.
இது பச்சை கற்பூரம் சேர்த்து, வெல்லம் மற்றும் எலுமிச்சையோடு, ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயின் வாசனை மிகவும் நன்றாக இருக்கும்.
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் காலத்திற்கு ஏற்றவாறு பண்டிகைகளும், அதற்கு பிரசாதம்/ உணவு முறைகளை எப்படி செய்துள்ளார்கள் என்று நினைத்தால் மிகவும் ஆச்சிர்யமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
இந்த ராம நவமி பண்டிகையும், தமிழ் வருடப்பிறப்பும் வெயில் காலத்தில் வருவதால், நம் உடல் குளிர்ச்சிக்கு ஏற்றவாறு இந்த பண்டிகைக் கால உணவுகளும் இருக்கின்றது!
பானகம், ராம நவமி அன்று செய்து படைக்கும் வழக்கம் உண்டு. இது, வெல்லம், எலுமிச்சை, &p;ஏலக்காய்,சுக்கு, பச்சை கற்பூரம் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும்.
Course: Drinks
Cuisine: Indian
Servings: 2 cups
Ingredients
- குளிர்ந்த தண்ணீர் - 2 கப்
- வெல்லம் - 1/2 கப்
- எலுமிச்சம் பழம் - 1
- பச்சை கற்பூரம் - ஒரு வெந்தயம் அளவு
- சுக்கு - 1/4 தேக்கரண்டி
- ஏலக்காய் - 1 பொடி செய்யவும்
- ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை
- உப்பு - ஒரு சிட்டிகை
- துளசி இலை - 5
Instructions
- தண்ணீரில் வெல்லத்தை கரைக்கவும். எலுமிச்சம் பழம், பச்சை கற்பூரம், சுக்கு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து, வடிகட்டவும்.
- துளசியை தூவி நெய்வேத்தியம் செய்து, பருகவும்.