பாந்தியா இயக்கம்
பாந்தியா இயக்கம் (Bandaya movement) என்பது 1974-இல் டி. ஆர். நாகராஜ், சூத்ரா சிறீனிவாசு ஆகியோரால் கன்னடத்தில் தொடங்கப்பட்ட ஒரு முற்போக்கான [கிளர்ச்சி] இலக்கிய இயக்கமாகும். இது சமூக அர்ப்பணிப்புள்ள இலக்கியத்தை ஊக்குவித்தது, கவிதையைச் சமூக, பொருளாதார அநீதிக்கு எதிரான ஆயுதமாக மாற்ற முயன்றது. "கவிதை ஒரு வாளாக இருக்கட்டும்! மக்களின் வலிக்குப் பதிலளிக்கும் அன்பான நண்பன்!" [" கட்கவாகலி காவ்யா! ஜனர நோவிகே மிடிவ பிரணமித்ரா! "], என்பது டி. ஆர். நாகராஜ் உருவாக்கிய இயக்கத்திற்கான முழக்கம்.[1]
இயக்கத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட முக்கிய கன்னட எழுத்தாளர்கள் சித்தலிங்கையா, சந்திரசேகர் பாட்டீல், சென்னன்னா வாலிகர், கலேகவுடா நாகவர், பூர்ணச்சந்திர தேஜஸ்வி, எச். எசு. சிவபிரகாஷ், பி. டி. இலலிதா நாயக், கும். வீரபத்ரப்பா, பரகுரு ராமச்சந்திரப்பா, பிரகலாத் பெட்டகேரி, அல்லாமா பிரபு பெட்டதூர், கீதா நாகபூசண், கே. எஸ். பகவான், சாந்தராசா, மல்லிகா காந்தி, சசிகலா வீரையா சுவாமி, பஞ்சகெரே ஜெயபிரகாசு, கங்காதர முதலியார், குடிஅள்ளி நாகராஜ், (இரம்ஜான் தர்கா) எசு. கிரேமத், சுகன்யா மாருதி, கே. சரீபா, பானு முஷ்டாக், அனுபமா, நேமிச்சந்திரா, கி. ரேம். நாகராஜ், இராஜசேகர் அடகுண்டி, எல். அனுமந்தய்யா, போல்பந்தெப்பா, (மறைந்த) இலிங்கண்ணா சத்யம்பேட், சத்யானந்த் பேட்ரோட், பசவராஜ் சபரத், சர்ஜூ கட்கர், ஆனந்த் ஜுஞ்சர்வாட், ஜம்பன்னா அமரசிந்தா, கவிசித்தா பெல்லாரி, சூர்யகாந்த் குணகிமத், ஆர்.என். ஜி.காமராஜ், பி. நாகராஜ் மற்றும் சதீசு குல்கர்னி.
மேலும் படிக்க
[தொகு]- Nagaraj, D.R. (2011) The Flaming Feet and Other Essays: The Dalit Movement in India. Edited by Prithvi Datta Chandra Shobhi. Ranikhet: Permanent Black.
- Satyanarayana, K & Tharu, Susie (2013) From those Stubs Steel Nibs are Sprouting, Dossier 2: Kannada and Telugu, New Delhi: HarperCollins India.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vajpeyi, Ananya (1 January 2011). ""Let Poetry Be a Sword!"". The Caravan இம் மூலத்தில் இருந்து 28 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150928052511/http://www.caravanmagazine.in/books/%E2%80%9Clet-poetry-be-sword%E2%80%9D.
வெளி இணைப்புகள்
[தொகு]பாந்தியா இயக்கம், வரலாறும், நோக்கங்களும்:ஒரு சுருக்கமான அறிமுகம். Kanaja archives என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது நடுகாலத கன்னடநாடு