பாத யாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நடந்து கொண்டே கடவுளை மனதில் நினைத்துக்கொண்டும் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டும் சிறுகச்சிறுக கடவுளை நெருங்குவதே பாத யாத்திரை ஆகும்.பாத யாத்திரை என்பது அனைத்து கடவுள்களுக்கும் மேற்கொள்ளலாம் என்றாலும் அதிகமாக முருகப்பெருமானை வழிபடவே மேற்கொள்ளப்படுகிறது.

பழநி பாத யாத்திரை[தொகு]

தை பூசம் அல்லது பங்குனி உத்திரத் தருவிழாவின் பொழுது தை மாதம் அல்லது பங்குனியில் (January and April) இந்த பாத யாத்திரையை செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் வந்து சேர்ந்த பின் முருகன் தோதிரப் பாடல்களைப் பாடிக் கொண்டும் , அரகரா, அரகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, ஞான தண்டாயுதப்பாணிக்கு அரோகரா,என்று கோஷங்களை எழுப்புகிறார்கள். அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் உள்ள நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தண்ணீர் குடத்தை அவர்களின் தலை மீது புரோகிதர் வைக்கின்றார். அதைத் தீர்த்தக் காவடி என்று கூறுகின்றனர். பாத யாத்ரீகர்களின் குழு முருகனின் பாடல்களைப் பாடியவாறே நடக்கத் துவங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 25-30 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்கின்றனர். அநேகமாக தைப் பூசம் அல்லது பங்குனி உத்திரத்தில் பழனியை சென்று அடையும் வகையில் நடந்து பழனி மலை அடிவாரத்தில் தங்குகின்றனர். அங்குள்ள சண்முக நதியில் குளித்தப் பின் மலையில் உள்ள முருகனை தரிசித்து அந்த புனித தண்ணீரை காணிக்கையாக தண்டாயுதபாணிக்கு செலுத்திய பின் அவருடைய அருள் கிடைக்க வேண்டுகின்றனர்.

பாத யாத்திரீகர்களிடம் இருக்க வேண்டிய குணங்கள்[தொகு]

 1. அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்
 2. அவர்கள் மது அருந்துவதோ, புகை பிடிப்பதோ கூடாது. மனதிலும், உடல் அளவிலும் சுத்தமாக இருக்க வேண்டும்.
 3. கடவுள் பாடல்களைப் பாட வேண்டும்
 4. குறைந்த அளவிலேயே உடைமைகள் எடுத்துச் செல்ல வேண்டும். தலையானிகள், படுக்கைகள் தவிர்கப்பட வேண்டும்.

பாத யாத்திரையின் பலன்கள்[தொகு]

 1. இது மன உறுதியைத் தந்து உடலுக்கும் வலிமை தருகின்றது
 2. மனிதனின் உலகப் பற்றின் மீதான அபரீதமான ஆசைகளை விலக்கி அமைதியான, மகிழ்ச்சிகரமான தெயவீகத்துடன் கூடிய வாழ்வைத் தருகின்றது.
 3. ஒரு மனிதன் நற்பண்புகளைப் பெற்று தெய்வ பக்தி பெறுகிறான்
 4. உண்மையான பக்தியை பெற வழி செய்கின்றது
 5. குறிப்பாக கிராமப்புறங்களில் ஒற்றுமையுடன் கூடிய சமூக நல வாழ்க்கை முறைகள் அமைய வகை செய்கின்றது.
 6. நிலையற்றதே இந்த வாழ்க்கை என்ற தத்துவத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றது
 7. நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை நமக்குள் அறிந்து கொள்ள வழி செய்கின்றது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத_யாத்திரை&oldid=2752363" இருந்து மீள்விக்கப்பட்டது