உள்ளடக்கத்துக்குச் செல்

பாத்திமா சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாத்திமா சா (Fatima Shah1914 - அக்டோபர் 12, 2002) [1] ஒரு பாக்கித்தான் மருத்துவர், சமூக சேவகர் மற்றும் பாக்கித்தானில் பார்வையற்றோருக்காக போராடுபவர் ஆவார். இவர் பாக்கித்தான் பார்வையற்றோர் சங்கத்தின் (பிஏபி) நிறுவனர் மற்றும் அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். சர்வதேச பார்வையற்றோர் கூட்டமைப்பின் தலைவரான முதல் பெண் எனும் பெருமை பெற்றார்.[2]

சுயசரிதை

[தொகு]

சா 1914 இல் பெராவில் பிறந்தார்.[3] இவரது குடும்பம் கல்வி நிலையில் சிறந்து இருந்தது. இவரது தந்தை, அப்துல் மஜீத் குரேஷி, அலிகார் பல்கலைக்கழகத்தின் கணிதத் துறையின் முன்னாள் தலைவராக இருந்தார்.[3] இவருடன் உடன் பிறந்தவர்கள் 12 சகோதரிகள் ஆவர் .[4] மெக்டொனால்டு உதவித் தொகை மூலம் தில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.[3]

இவர் லக்னோவின் டஃபெரென் மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகச்சேர்ந்தார். 1937 இல் கோராக்பூரின் ஆளுமையான ஜவாத் அலி சாவை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு இவரால் பணியினைத் தொடர முடியவில்லை. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.[5] 1947 இல் இந்தியப் பிரிப்பிற்குப் பிறகு, இவர் பாக்கித்தானுக்கு வந்தார், ஆனால் இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மோதல் காரணமாக திரும்பிச் செல்ல முடியவில்லை.

1947 இல் சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்த அகதிப் பெண்களின் மறுவாழ்வுக்காக சா 1947 ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார் [6] 1949 இல் நிறுவப்பட்ட அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் சாவும் ஒருவராக இருந்தார்.[7] கராசீயின் மகளிர் நலவியலில் பரவலாக அறியப்படும் மருத்துவர்களில் ஒருவராக இருந்தார்.

இவர் 1960 இல் பாக்கித்தான் பார்வையற்றோர் சங்கத்தை (பிஏபி) நிறுவினார். இவர் பிஏபியின் தலைவராக 1984 இல் ஓய்வு பெறும் வரை அந்தப் பதவியில் நீடித்தார்.[3]

இவர் பேகம் ராணா லியாகத் ஆலி கான் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார், பார்வையற்றோருக்கான மாநில திட்டங்களைப் படிப்பதற்காக இவர் 1964 இல் அயோவாவுக்குச் சென்றார். [8] அமெரிக்காவில், நியூயார்க்கில் உள்ள சர்வதேச பார்வையற்றோர் கூட்டமைப்பின் (IFB) நிறுவன உறுப்பினர்களில் ஒருவரானார். இவர் அந்த அமைப்பின் இரண்டாவது துணைத் தலைவரானார்.[9]

இவர் பாக்கித்தானுக்குத் திரும்பியபோது, ஊனமுற்றவர்கள் வேலை இழக்கப்படுவதால், சுகாதார விதிமுறையை நீக்குமாறு இவர் பாக்கித்தான் அரசை வலியுறுத்தினார். பாக்கித்தானில் பிரெயில் எழுத்து முறையினை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துமாறு இவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.[3]

மருத்துவர் சா பாக்கித்தானின் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பை ஏற்பாடு செய்தார். வேர்ல்டு பிளைண்ட் யூனியன் (சர்வதேச பார்வையற்றோர் சங்கம்) எனும் உலகளாவிய அமைப்பை நிறுவுவதில் இவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் மற்றும் தேசிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.[3]

சா அக்டோபர் 12, 2002 அன்று இறந்தார் மற்றும் கராச்சியில் உள்ள பாதுகாப்பு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

விருதுகள்

[தொகு]

ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவில் சமூக சேவைகளில் இவர் பணியாற்றியதற்காக MBE பெற்றார்.[10] பார்வையற்றோருக்கான சுய உதவி அமைப்புகளுடன் பணியாற்றியதற்காக ஸ்வீடனின் கோதன்பர்க்கில் டேகோ இவாஹஷி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3] பாக்கித்தான் அரசு இவருக்கு தம்கா-இ-இம்தியாஸ் விருதினை வழங்கியது.[3]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

[தொகு]

டிசெபிலிட்டி:செல்ஃப் ஹெல்ப் அண்ட் சோழியல் சேஞ்ச் மற்றும் சன்சைன் & சேடோஸ்: தி ஆட்டோபயோகிராபி ஆஃப் டாக்டர் ஃபாதிமா சா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Those Who Left Us 2002". Economic Review. 1 January 2003 இம் மூலத்தில் இருந்து 4 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170804012641/https://www.highbeam.com/doc/1G1-100243522.html. 
  2. "Pakistan: Leading Light". Women's Feature Service. 7 June 2006 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181115234941/https://www.highbeam.com/doc/1P3-1109485401.html. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "Dr Fatima Shah passes away". Dawn. 13 October 2002. பார்க்கப்பட்ட நாள் 3 August 2017.
  4. "Dr. Fatima Shah -- 'A Beacon in Darkness'". The Braille Monitor. March 1965. https://nfb.org/images/nfb/publications/bm/bm1965/65bm-mar.html#a11. 
  5. https://www.facebook.com/827687200693809/photos/a.893111787484683.1073741837.827687200693809/893112824151246/?type=3&theater ، Dr Fatima Shah ,Page 46,Khaas Log Khaas Kahanian by Gohar Taj
  6. Women with disabilities, ref 1822 ,https://books.google.com/books?id=HIISikCITAgC&pg=PA426&lpg=PA426&dq=Raihana%20A.%20Hasan%20....%20DR%20FATIMA%20SHAH&source=bl&ots=O_-hSTnwm2&sig=OBmj_MmDv7dVFg6kHNVCOodDMfU&hl=en&sa=X&ved=0ahUKEwjfq6fB-IXSAhVEzRQKHXBOBEYQ6AEIHjAB#v=onepage&q=Raihana%20A.%20Hasan%20....%20DR%20FATIMA%20SHAH&f=false
  7. Ansari, Ishrat (14 October 2014). "Learning How to See Again". The Express Tribune.
  8. Curran, Pat (29 July 1964). "Educator, Pakistan Doctor, Both Blind, Visit Blairsburg Farm". The Muscatine Journal and News-Tribune. https://www.newspapers.com/clip/12833667/. 
  9. Chandler, Jagdish (2014). "Self-Advocacy and Blind Activists". In Burch, Susan; Rembis, Michael (eds.). Disability Histories. Urbana, Illinois: University of Illinois Press. p. 373. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780252096693.
  10. "Founder". Pakistan Association of the Blind Sindh Head Office. பார்க்கப்பட்ட நாள் 2017-08-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திமா_சா&oldid=3765798" இலிருந்து மீள்விக்கப்பட்டது