பாத்திமா அலி
பாத்திமா அலி | |
---|---|
![]() | |
பிறப்பு | இலாகூர், பஞ்சாப், பாக்கித்தான் | ஆகத்து 8, 1989
இறப்பு | சனவரி 25, 2019 சான் மரினோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 29)
பணி | வாலுவர், உணவக உரிமையாளர், தொலைக்காட்சி ஆளுமை |
பாத்திமா அலி (Fatima Ali) ஆகஸ்ட் 8,1989-ஜனவரி 25,2019) ஓர் பாக்கித்தானில் பிறந்த அமெரிக்க சமையல்காரரும், உணவக உரிமையாளரும் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையும் ஆவார். உண்மைநிலை நிகழ்ச்சியான சோப்டு மற்றும் டாப் செப் என்ற சமையல் நிகழ்ச்சிகளில் வெற்றிகரமாக தோன்றியதற்காகவும் இவர் அறியப்படுகிறார். தனது எழுத்துக்காக மரணத்திற்குப் பிறகு ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை விருதுகள் இருமுறை வழங்கப்பட்டது.
இளமை வாழ்க்கை.
[தொகு]பாத்திமா அலி, பாக்கித்தானின் கல்வியாளர் பராஸ் துரானி மற்றும் வழக்கறிஞர் அஸ்தார் அவுசாப் அலி ஆகியோரின் மகளாகப் பிறந்து வளர்ந்தார், கராச்சிக்கும் இலாகூருக்கும் இடையில் அடிக்கடி வாழ்ந்து வந்தார்.[1][2] இவர் கராச்சி இலக்கணப் பள்ளியில் தனது கல்வியைப் பயின்றார். 2016 முதல் 2018 வரை மற்றும் மீண்டும் மே 2022 முதல் பாக்கித்தானின் அரசு முதன்மை வழக்குரைஞராக இருந்தார்.[3][4] தனது தந்தை, பாட்டி மற்றும் தனது குடும்ப சமையல்காரர் காதிர் ஆகியோரிடமிருந்து சமைக்கக் கற்றுக்கொண்டார்.[5][6] தனது 18 வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அமெரிக்க சமையல் நிறுவனத்தில் சேர்ந்து, 2011 இல் பட்டம் பெற்றார்.[3][5][7]
தொழில் வாழ்க்கை
[தொகு]பாத்திமா அலி நியூயார்க்கு நகரிலுள்ள கஃபே சென்ட்ரோ என்ற உணவு விடுதியில் சமையல்காரராக தனது சமையல் வாழ்க்கையைத் தொடங்கினார்.[3] 2012 ஆம் ஆண்டில், இவர் அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒரு சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். [5] நியூயார்க் நகரில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். மெக்கே எரால்ட் சதுக்கத்தில் உள்ள ஸ்டெல்லா 34 ட்ரட்டோரியா என்ற உணவு விடுதியில் தலைமை சமையல்காரராகவும், பின்னர் லா ஃபோண்டா டெல் சோல் என்ற உணவு விடுதியில் தலைமை சமையல்காரராகவும் ஆனார்.[7]
2017 ஆம் ஆண்டில், பாத்திமா அலி டாப் செஃப்ஃ கொலராடோ என்ற சமையல் போட்டியின் போட்டியாளராக இருந்தார். இவர் ஏழாவது இடத்தில் இருந்தபோதிலும், ரசிகர்களின் விருப்பமானவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
நோயும் இறப்பும்
[தொகு]பாத்திமா அலிக்கு எலும்பு புற்றுநோய் கண்டறியப்பட்டு ஜனவரி 2018 இல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.[7] வேதிச்சிகிச்சைக்குப் பிறகு, இவருக்கு புற்று நோய் அறிகுறி நீங்கியதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 2018 இல், பாத்திமா ‘பெப்பிள் கடற்கரை உணவு மற்றும் ஒயின் விழா’வில் பொதுவெளியில் சமைத்தார்.[8] [9] ஆனாலும் மீண்டும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர் தனது 29 வயதில் ஜனவரி 25,2019 அன்று கலிபோர்னியாவின் சான் மரினோவில் உள்ள தனது வீட்டில் காலமானார்.[3][10]
பாத்திமா பிப்ரவரி 2019 இல் இலாகூரில் அடக்கம் செய்யப்பட்டார். ஏப்ரல் 2019 இல், இவரது கட்டுரைக்காக மரணத்திற்குப் பிறகு ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை விருது வழங்கப்பட்டது.[11][12] தாராஜியா மோரெல் எழுதிய இவரது நினைவுக் குறிப்பு அக்டோபர் 2022 இல் வெளியிடப்பட்டது . இது ஜூன் 2023 இல் ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை விருதைப் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fatima Ali, Fan Favorite on 'Top Chef,' Dies at 29". January 26, 2019. https://www.nytimes.com/2019/01/26/obituaries/fatima-ali-dead-chef.html.
- ↑ "Pakistani chef spices up American cooking show". June 18, 2012. https://www.dawn.com/news/727515/pakistani-chef-spices-american-cooking-show.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Mays, Jeffery C. (January 26, 2019). "Fatima Ali, Fan Favorite on 'Top Chef,' Dies at 29". The New York Times. https://www.nytimes.com/2019/01/26/obituaries/fatima-ali-dead-chef.html.Mays, Jeffery C. (January 26, 2019). "Fatima Ali, Fan Favorite on 'Top Chef,' Dies at 29". The New York Times.
- ↑ "Chef Fatima Ali laid to rest by family and friends in Lahore". February 2, 2019. https://images.dawn.com/news/1181782.
- ↑ 5.0 5.1 5.2 Faruqi, Sara (June 18, 2012). "Pakistani chef spices up American cooking show". Dawn. https://www.dawn.com/news/727515/pakistani-chef-spices-american-cooking-show.Faruqi, Sara (June 18, 2012). "Pakistani chef spices up American cooking show". Dawn.
- ↑ "Chef Fatima Ali Has Died of Cancer at Age 29; This Is Her Essay from Our Upcoming Issue". January 25, 2019. https://www.bonappetit.com/story/fatima-ali-died-cancer.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Bravo's Top Chef Alum Fatima Ali Has Passed Away After Her Battle with Cancer". January 25, 2019. http://www.bravotv.com/the-daily-dish/top-chef-season-13-contestant-fatima-ali-dies-at-29.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Erica Chayes Wida (April 9, 2018). "After battling cancer, 'Top Chef' star Fatima Ali returns to the kitchen". Today. https://www.today.com/food/after-cancer-battle-top-chef-fatima-ali-sells-out-first-t126725.
- ↑ Ali, Fatima (October 9, 2018). "I'm a Chef With Terminal Cancer. This Is What I'm Doing with the Time I Have Left". Bon Appétit. https://www.bonappetit.com/story/fatima-ali-cancer.
- ↑ Goldstein, Joelle (January 26, 2019). "Fatima Ali's Family Speaks Out After the Top Chef Contestant Dies from Rare Form of Bone Cancer". People Magazine. https://people.com/food/top-chef-fatima-ali-family-speaks-out-after-death/.
- ↑ "The 2019 James Beard Media Award Winners". James Beard Foundation. April 26, 2019. https://www.jamesbeard.org/blog/the-2019-james-beard-media-award-winners.
- ↑ Dubin, Alesandra (April 28, 2019). "Chef Fatima Ali Posthumously Wins a James Beard Award: "She Belonged in That Room"". Bravo TV. https://www.bravotv.com/top-chef/the-feast/fatima-ali-posthumously-wins-james-beard-award.