உள்ளடக்கத்துக்குச் செல்

பாத்தாங்காரி ஆறு

ஆள்கூறுகள்: 1°03′43″S 104°12′25″E / 1.06194°S 104.20694°E / -1.06194; 104.20694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத்தாங்காரி ஆறு
Batang Hari River
Sungai Batanghari
பாத்தாங்காரி ஆறு (1877–1879)
பாத்தாங்காரி ஆறு is located in Sumatra
பாத்தாங்காரி ஆறு
      பாத்தாங்காரி கழிமுகம்
அமைவு
நாடு இந்தோனேசியா
மாநிலம்மேற்கு சுமாத்திரா, ஜாம்பி
துணை மாநிலம்சோலோக் குறுமாநிலம்
தெற்கு சோலோக் குறுமாநிலம்
தருமசிராயா குறுமாநிலம்
புங்கோ குறுமாநிலம்
தெபோ குறுமாநிலம்
பாத்தாங்காரி குறுமாநிலம்
முவாரோ ஜாம்பி குறுமாநிலம் கிழக்கு தஞ்சோங் ஜாபூங்
ஜாம்பி நகரம்
சிறப்புக்கூறுகள்
மூலம்ராசான் மலை
 ⁃ அமைவுசோலோக் சிறு மாநிலம், மேற்கு சுமாத்திரா
முகத்துவாரம்தென்சீனக் கடல்
 ⁃ அமைவு
கிழக்கு தஞ்சோங் ஜாபூங் குறுமாநிலம், ஜாம்பி
 ⁃ ஆள்கூறுகள்
1°03′43″S 104°12′25″E / 1.06194°S 104.20694°E / -1.06194; 104.20694
நீளம்800 கிமீ[1]
வடிநில அளவு44,890 சதுர கிமீ[2] 46,504 சதுர கிமீ[1]
வெளியேற்றம் 
 ⁃ அமைவுபாத்தாங்காரி கழிமுகம், பெர்காலா நீரிணை
 ⁃ சராசரி(1992–2016) 2,556 m3/s (90,300 cu ft/s)[2]

(2016–2020) 2,819 m3/s (99,600 cu ft/s)[3]

2,643 m3/s (93,300 cu ft/s)[1]

பாத்தாங்காரி ஆறு (ஆங்கிலம்: Batang Hari River; இந்தோனேசியம்: Sungai Batanghari; Djambi-rivier) என்பது இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் வடமேற்கில் உள்ள ஆறாகும்.

இந்தோனேசியாவில் மிக நீளமான ஆறு என அறியப்படும் இந்த ஆறு, சுமார் 600 கிலோமீட்டர்கள் (370 மைல்) நீளம் கொண்டது.[4] இந்தோனேசிய வரலாற்றில் தடம் பதிக்கும் ஆறுகளில் இந்த ஆறும் ஒன்றாகும்.

நீரியல்

[தொகு]

இந்த ஆறானது, மேற்கு சுமாத்திராவில் (West Sumatra Province), மினாங்கபாவு மக்களின் தாயகமாக விளங்கும் மினாங்கபாவு பெருநிலத்தில் (Minangkabau Highlands) உருவாகிறது. பின்னர் அது ஜாம்பி பிரிவின் (Jambi Province) வழியாக சுமாத்திராவின் கிழக்கு கடற்கரையில் பாய்கிறது.

பின்னர் இந்த ஆறு, கிழக்கு தஞ்சோங் ஜாபூங் மாநிலத்தின் (East Tanjung Jabung Regency) நிப்பா பாஞ்சாங் மாவட்டத்தில் (Nipah Panjang District) கடலை அடைகிறது. ஆசிய நெடுஞ்சாலை 25 () ஜாம்பி நகரில் ஆற்றைக் கடந்து செல்கிறது. இந்த நகரம் ஆற்றின் முகப்பில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது.

மீன்பிடித்தல், போக்குவரத்து, சுரங்கத் தொழில் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உள்ளூர் மக்களால் பாத்தாங்காரி ஆறு பயன்படுத்தப்படுகிறது.[5]

புவியியல்

[தொகு]

இந்த ஆறு சுமாத்திராவின் மத்தியப் பகுதியில் பாய்கிறது. இந்தப் பகுதி வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது (கோப்பன்-கீகர் காலநிலை வகைப்பாட்டில் Af என குறிப்பிடப்படுகிறது).[6]

இப்பகுதியில் ஓர் ஆண்டின் சராசரி வெப்பநிலை 23 °C (73 °F) என பதிவாகி உள்ளது.

  • வெப்பமான மாதம் ஏப்ரல்; சராசரி வெப்பநிலை சுமார் 24 °C (75 °F);
  • குளிரான மாதம் சனவரி; சராசரி வெப்பநிலை 22 °C (72 °F);
  • சராசரி ஆண்டு மழைப்பொழிவு 2383–3183 மிமீ;

சராசரியாக 344 மிமீ (13.5 அங்குலம்) மழைப் பொழிவுடன் டிசம்பர் மாதத்தில் அதிக மழை பெய்யும்; மேலும் 90 மிமீ மழைப் பொழிவுடன் மிக வறட்சியான மாதம் ஆகத்து மாதம் ஆகும்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "sda.pu.go.id".
  2. 2.0 2.1 Müller-Dum, Denise; Warneke, Thorsten; Rixen, Tim; Müller, Moritz; Baum, Antje; Christodoulou, Aliki; Oakes, Joanne; Eyre, Bradley D. et al. (2019). "Impact of peatlands on carbon dioxide (CO2) emissions from the Rajang River and Estuary, Malaysia". Biogeosciences 16 (1): 17–32. doi:10.5194/bg-16-17-2019. Bibcode: 2019BGeo...16...17M. https://bg.copernicus.org/articles/16/17/2019/. 
  3. "Floating marine debris along Indonesian coasts" (PDF).
  4. Sungai Batang Hari at Geonames.org (cc-by); Last updated 2013-06-04; Database dump downloaded 2015-11-27
  5. "Uses of the Batanghari River" (in en-US). Sumatran Feet. 2011-06-13. https://sumatfeet.wordpress.com/2011/06/13/uses-of-the-batang-hari-river/. 
  6. Peel, M C; Finlayson, B L; McMahon, T A (2007). "Updated world map of the Köppen-Geiger climate classification". Hydrology and Earth System Sciences 11 (5): 1633–1644. doi:10.5194/hess-11-1633-2007. Bibcode: 2007HESS...11.1633P. http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.html. பார்த்த நாள்: 30 January 2016. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்தாங்காரி_ஆறு&oldid=4194437" இலிருந்து மீள்விக்கப்பட்டது