பாத்சாகி சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாத்சாகி சாலை (Badshahi Road) வங்கத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சாலைகளில் மிக முக்கியமான ஒரு சாலையாகும்.இச்சாலை கி.மு 300 காலகட்டத்தைச் சார்ந்த சாலையாக இருக்கலாம் [1]. மால்டாவிலிருந்து (கவுர்) முர்சிதாபாத் வழியாக புரி (ஒரிசா) நகரத்தை இணைக்கும் சாலையாக இருந்ததால் முகலாயர் ஆட்சிக் காலத்தில் [2] இந்த பாத்சாகி சாலை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. இந்தச் சாலை வழியாக செல்லும் ஒருவனால் வரலாற்றின் ஒரு பெரும் பகுதியைக் கண்டுபிடிக்க முடியும். அகன்று பரந்த இச்சாலையில் ஒவ்வொரு எட்டு மைல் தொலைவிற்கும் ஒரு மசூதியும் மற்றும் தோண்டப்பட்ட பெரிய குளங்களும் அமைந்து, வரலாற்றில் வாழ்ந்த வளமான முகலாயர் காலத்தினை நினைவுபடுத்துகின்றன. வட இந்தியா மற்றும் வங்காளத்திலிருந்து ஒரிசா மாநிலம் புரியில் உள்ள சகந்நாதர் ஆலயத்திற்குச் செல்லும் இந்துக்களுக்கு இச்சாலை ஓர் பிரதானமான சாலையாகும். ஆதிசங்கரர் (788-820 CE), ஏற்படுத்திய நான்கு முக்கியமான மையங்களில் ஒன்றாக இங்குள்ள கோவர்தன மடம் திகழ்கிறது.

சைதன்யர் (1486-1533) மற்றும் அவரது ஆதரவாளர்கள் வங்காளம் முழுவதும் வைணவப் பிரிவை பக்தி இயக்கத்தின் மூலமாகப் பரப்பிய பிறகு, புனித யாத்திரை செல்லும் வங்காளிகளுக்கு புரிக்கு தெற்கிலும், வட மேற்காக உள்ள பிருந்தாவன் செல்லும் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் மென்மேலும் அதிகரித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Archaeological geography of the Ganga Plain: the lower and the middle Ganga. Author: Dilip K. Chakrabarti. Orient Blackswan, 2001. ISBN 81-7824-016-5, ISBN 978-81-7824-016-9
  2. Land and Local Kingship in Eighteenth-Century Bengal. Author John R. McLane Publisher Cambridge University Press, 2002. ISBN 0-521-52654-X, 9780521526548
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்சாகி_சாலை&oldid=2697733" இருந்து மீள்விக்கப்பட்டது