பாதோ மலை வாழிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதோ மலை வாழிடம் (Bado Hill Station) பாக்கித்தானின் சிந்து மாகாணத்திலுள்ள தாது மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழிடம் ஆகும்[1]. பாதோ யபால் மலை வாழிடம் என்ற பெயராலும் இவ்விடம் அறியப்படுகிறது. கிதார் மலைத்தொடரில் சேக்வானுக்கு வடமேற்கில் 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் (914 மீட்டர் உயரம்) பாதோ மலை வாழிடம் வாழிடம் அமைந்துள்ளது. அருமையான வானிலையும் கிர்தார் மலைத்தொடரின் அழகிய பீடபூமிகள் மற்றும் மலைகளும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இது அமைந்திருக்கிறது[2].. இயற்கையின் எழிலை விரும்புபவர்களுக்கு இவ்விடம் மிகவும் உகந்த இடமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sind University Research Journal: science series. Faculty of Science, University of Sind. 2008.
  2. "Development work to continue: Nazim: Gorakh Hill Station, Bado Jabal".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதோ_மலை_வாழிடம்&oldid=3028062" இலிருந்து மீள்விக்கப்பட்டது