உள்ளடக்கத்துக்குச் செல்

பாதேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதேலி
भटियाली
தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட "பாதேலி" என்ற சொல்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்இமாச்சலப் பிரதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
24,000  (2011)[1]
இந்தோ-ஐரோப்பிய
தக்கிரி எழுத்துமுறை, தேவநாகிரி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3bht
மொழிக் குறிப்புbhat1263[2]

 

பாதேலி (Bhateali) அல்லது பட்டியாலி என்பது வட இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் பேசப்படும் இமாச்சல மொழியாகும். இது சம்பாவின் பட்டியல் பிரிவு, டல்ஹவுசி, காங்க்ராவின் நூர்பூர் பிரிவு மற்றும் பதான்கோட்டின் மலைப்பகுதிகளிலும் அதிகமாகப் பேசப்படுகிறது. 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மொழியினை பேசக்கூடியவர்கள் 23,970 இருந்தனர்.[1] இவர்களில் 15,107 பேர் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் வசித்தனர்.[3]

பாதேலி சில சமயங்களில் இமாச்சல/தோக்ரி மொழி[4][5] அல்லது பஞ்சாபியின் பேச்சுவழக்காகக் கணக்கிடப்படுகிறது.[6] இது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு - இந்தியாவில் பஞ்சாபியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.[7]

இது வரலாற்று ரீதியாக தக்கிரி எழுத்துமுறையினைப் பயன்படுத்தி எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Cenus 2011" (PDF). Retrieved 26 March 2023.
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "பட்டியாலி". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. "2011 Census District level statistics". Retrieved 26 March 2023.
  4. Verbeke, Saartje (2017-11-27). Argument structure in Kashmiri: Form and Function of Pronominal Suffixation (in ஆங்கிலம்). BRILL. ISBN 978-90-04-34678-9.
  5. Tiwari, Dr Siyaram. Bhartiya Bhashaon Ki Pahchan (in இந்தி). Vani Prakashan. ISBN 978-93-5229-677-4.
  6. Ralph Lilley Turner (1985), A Comparative Dictionary of the Indo-Aryan Languages (in ஆங்கிலம்), விக்கித்தரவு Q115652507
  7. "India - LANGUAGE (PAPER 1 OF 2018)-CENSUS OF INDIA 2011". censusindia.gov.in. Retrieved 26 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதேலி&oldid=4208284" இலிருந்து மீள்விக்கப்பட்டது