பாதுகாப்புப் பெட்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவிஸ் வங்கியின் உள்ளே பாதுகாப்புப் பெட்டகம்.
2011 ஜாப்லி சூறாவளிக்குப் பிறகு பாதுகாப்புப் பெட்டகம்.

பாதுகாப்பு வைப்புப் பெட்டகம் (safe deposit box, சில சமயங்களில் safety deposit box என்று தவறுதலாக அறியப்படுவது, [1] என்பது ஒரு பெரிய பெட்டகத்துக்குள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கொள்கலனாகும். இவை பொதுவாக வங்கி, அஞ்சலகம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும். பாதுகாப்புப் பெட்டகமானது மதிப்புமிக்க உடைமைகளை சேமிக்க பயன்படுகிறது. அதாவது இரத்தினக்கற்கள், அரிய உலோகங்கள், பணம், விலைமதிப்புமிக்கப் பொருட்கள், முக்கிய ஆவணங்கள் (எ.கா. உயில், சொத்து ஆவணங்கள், பிறப்புச் சான்றிதழ்), அல்லது கணிப்பொறித் தரவுகள் போன்றவற்றை திருட்டு, நெருப்பு, வெள்ளம், சேதம், அல்லது பிற ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டு, வங்கிகள் அல்லது FDIC ஆகியவை பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்களுக்கு காப்பீடு செய்யவதில்லை.[2] திருட்டு, தீ, வெள்ளம், பயங்கரவாத தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள் போன்ற இழப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தனிநபரே பாதுகாப்பு வைப்பு பெட்டகத்துக்கான காப்பீட்டை பெற வேண்டும்.

பல விடுதிகள், உல்லாச விடுதிகள், கப்பல்கள் ஆகியவற்றில் தங்கும் தங்களுடைய வாடிக்கையாளுக்கு அவர்களின் தற்காலிக பயன்பாட்டிற்காக பாதுகாப்பு வைப்புப் பெட்டக வசதியை வழங்குகின்றன.[3] இந்த வசதிகள் வரவேற்பு மேசைக்கு பின்புறமாகவோ அல்லது தனியுரிமைக்காக தனிப்பட்ட விருந்தினர் அறைகளில் பாதுகாப்புப் பெட்டகங்கள் வைக்கப்பட்டிருக்கலாம்.

பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்களில் உள்ள உரிமைகோராத அல்லது முடக்கப்பட்ட சொத்தை சட்ட விதிகளின்படி பறிமுதல் செய்யலாம்.[4]

மேற்கோள்கள்[தொகு]