பாதுகாப்புச் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதுகாப்புச் சோதனை (Security testing) என்பது ஒரு தகவல் ஒருங்கியத்தின் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை உடைக்கப் பார்த்து அவற்றை உறுதிப்படுத்தும் சோதனை முறை ஆகும். தரவுகளைப் பாதுகாப்பதும், மென்பொருளை தொடர்ந்து எதிர்பார்த்த மாதிரி இயங்கச் செய்வதும் இதன் முதன்மை நோக்கங்களுக்குள் அடங்கும். அனுமதிக் கட்டுப்பாடு, அடையாளம் உறுதிசெய்தல், தரவுப்பாதுகாப்பு என்று பல்வேறு கூறுகள் இதில் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதுகாப்புச்_சோதனை&oldid=1732665" இலிருந்து மீள்விக்கப்பட்டது